Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரம்பரியத்துக்காக மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்க முடியுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாரம்பரிய அடையாளம் உள்ளதால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதித்து விட முடியுமா என தமிழக அரசின் வாதம் மீது உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில், அப்போட்டிக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு (2016) மே மாதம் 7-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் பிறப்பிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். மத்திய அரசும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கும் வகையில், கடந்த ஜனவரி 7-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

பாரம்பரிய நடைமுறையில் அனுமதிக்க வேண்டும்

பாரம்பரிய நடைமுறையில் அனுமதிக்க வேண்டும்

இது தொடர்பான வழக்கு வழக்கு இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபதே வாதாடினார். மேலும், 22 பக்கம் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டு கலாசார மற்றும் மத ரீதியான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது என்றும், அதை பாரம்பரிய நடைமுறை என்ற அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.

இதிகாசங்கள்

இதிகாசங்கள்

ஜல்லிக்கட்டு போட்டியானது சிந்து சமவெளி காலத்திலேயே இருப்பதற்கான தடயங்கள் இருப்பதுள்ளது. அதற்காக தடயங்கள் இருப்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. கடவுள் கிருஷ்ணா, மாடுகளை அடக்கியதாக கூறப்படும் இதிகாசங்கள் சுட்டிக்காட்டப்பட்டது.

காளைச் சண்டை

காளைச் சண்டை

கலாச்சார, பாரம்பரியம் என்ற பெயரில் விலங்குகள் கொல்லப்படுவதற்கு அரசியலமைப்பு அனுமதிக்கிறது. ஆனால், ஜல்லிக்கட்டு மட்டும் ஏன் சட்டத்திற்கு விரோதமானதாக கருதப்படுகிறது. பிரான்ஸ் உள்ளிட்ட 8 நாடுகளில் காளைச் சண்டை நடத்தப்படுகிறது. அதில் கொடூரமாக காளைகள் கொல்லப்படுகின்றன. அதை அந்நாட்டு அரசுகள் சட்ட விரோதமானதாக கருதவில்லை.

காளைகள் 30 நொடிகளே களத்தில் இருக்கும்

காளைகள் 30 நொடிகளே களத்தில் இருக்கும்

ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு, அதில் இளைஞர்கள் பாரம்பரியமாக அதில் பங்கெடுத்து வருகின்றனர். காளைகள் மாட்டிறைச்சிக்காவும் வளர்க்கப்படுகிறது. குறிப்பிடும் படியாக காளையானது ஜல்லிக்கட்டின் போது 30 நொடிகளே களத்தில் இருக்கும், கிராமப் புறங்களில் ஜல்லிக்கட்டுக் காளைகள் வளக்கப்படுவதால், அவை அச்சமடைவதில்லை.

நீதிபதிகளின் கருத்து

நீதிபதிகளின் கருத்து

இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் கூறியதாவது: 1899-ம் ஆண்டு 12-வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் சுமார் 10,000 பேருக்கு குழந்தைத் திருமணம் நடைபெற்றது. அப்போது அதனால் அவற்றை பாரம்பரியமாக கருதி, தற்போது அவற்றை அனுமதிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினர். மேலும், வழக்கு குறித்த இறுதி விசாரணையை ஆகஸ்ட் 23-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+