For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி - ஒபாமா சந்திப்புக்கு "லைக்" போட்ட மார்க்

Google Oneindia Tamil News

டெல்லி: பேஸ்புக்கில் லைக் போடுவது என்பது நமக்கெல்லாம் அல்வா சாப்பிடுவது போல. ஆனால் அந்த பேஸ்புக்கை நிறுவிய மார்க் ஸுகர்பர்க் ஒரு புகைப்படத்துக்கு லைக் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி கட்டிப் பிடித்து வரவேற்கும் புகைப்படத்துக்குத்தான் லைக் கொடுத்துள்ளார் மார்க்.

Mark Zuckerberg Liked this Photo Posted by PM on Facebook

டெல்லி வந்த ஒபாமாவை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே சென்று கட்டிப் பிடித்து வரவேற்றார். இந்தப் புகைப்படம் உலக அளவில் தற்போது பிரபலமாகி விட்டது. கிட்டத்தட்ட வைரல் போல மாறியுள்ளது. உச்சமாக, பேஸ்புக் நிறுவனர் மார்க்கும் இந்தப் புகைப்படத்திற்கு லைக் போட்டுள்ளார்.

மார்க்கே லைக் போட்டுட்டாரே என்று பலரும் தற்போது மாய்ந்து மாய்ந்து லைக் போட்டுக் கொண்டுள்ளனர் இந்தப் படத்திற்கு. பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில்தான் இந்தப் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 11.41 லட்சம் லைக்குகளை இந்தப் படம் வாரிக் குவித்துள்ளது. கிட்டத்தட்ட 30 ஆயிரம் கமெண்டுகள் குவிந்துள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.

அதுவும் மார்க் லைட் போட்ட செய்தி பரவியதும் இந்தப் புகைப்படத்திற்கு லைக்குகள் மேலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளனவாம்.

English summary
Within two hours of the bear hug that he greeted President Obama with, PM Modi's photo of the warm welcome at the Delhi airport was getting a lot of love on Facebook. By 2.15 pm, the post from the PM's official account had over 10 lakh likes and nearly 25,000 comments. Among those who provided a thumbs up was Facebook's founder and CEO Mark Zuckerberg.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X