For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலநடுக்கத்தில் நேபாள இந்திய தூதரக சுவர் இடிந்து ஊழியர் மகள் பலி: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதில் தூதரக ஊழியரின் மகள் பலியாகி உள்ளார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் இன்று ரிக்டரில் 7.9 அலகுகளில் பயங்கர நிலநடுக்கம் பதிவானது. இதில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கான கட்டிடங்கள், கோவில்கள் தரைமட்டமாகி உள்ளன.

Nepal quake: Indian Embassy complex collapses- One dead

இந்நிலையில் காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் தூதரக ஊழியர் மதன் என்பவரது மகள் பலியாகி உள்ளார் என்று ட்விட்டரில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Union Minister User Sushma Swaraj said that on Nepal quake, "A house in our Embassy complex collapsed. Unfortunately, the daughter of our employee Madan has died. His wife's condition is serious in her tweet page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X