போலீஸ் அதிகாரியின் தோலை உரிப்பேன்.. பாஜக பெண் எம்.பி. மிரட்டல் பேச்சு
பாஜக பெண் எம்.பி., காவல்துறை அதிகாரிக்கு கடுமையாக மிரட்டல் விடுத்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா: காவல்துறை அதிகாரியை உயிருடன் வைத்து தோலை உரிப்பேன் என்று உத்தரப்பிரதேச பாஜக பெண் எம்.பி. மிரட்டிய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இதைத் தொடர்ந்து பணி நேரத்துக்கு வராத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை, அனுமதியில்லாத மாட்டிறைச்சிக் கடைகளை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ. கேசர் சிங், வங்கி அதிகாரி ஒருவரை தாக்கிய புகாரில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பாஜக எம்.பி. பிரியங்கா சிங் ராவத், போலீஸ் அதிகாரியை கடுமையாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் அவரை அணுகி பேட்டி எடுத்துள்ளனர். அப்போது காவல்துறை அதிகாரியை உயிருடன் வைத்து தோலை உரிப்பேன் என்று மிரட்டல் விடுத்தார். காவல்துறை அதிகாரிகள் தன்னிடம் கன்னியக்குறைவாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், போலீஸ் அதிகாரி இந்த மாவட்டத்திலேயே இருக்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்தார். பாஜக பெண் எம்.பி. பிரியங்கா சிங் ராவத், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே போலீஸ் அதிகாரியை மிரட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி












Click it and Unblock the Notifications