மருத்துவ பரிசோதனை முடிந்து டெல்லி திரும்பினார் சோனியா காந்தி!
மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு சென்றிருந்த சோனியா காந்தி நாடு திரும்பினார்.
டெல்லி: சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியுடன் டெல்லி திரும்பினார்.
கடந்த சில மாதங்களாக சோனியா காந்தியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு வாரணாசியில் வாகன பேரணி நடத்தியபோது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது உடனே டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சர் கங்காராம் மருத்துவமனையிலும் சோனியா சிகிச்சை பெற்றார். அண்மைக்காலமாக பொது நிகழ்ச்சிகளை சோனியா காந்தி தவிர்த்தே வந்தார்.
அதன் பின்னர் உடல் பரிசோதனை மற்றும் சில சிகிச்சைக்காக கடந்த எட்டாம் தேதி அமெரிக்காவுக்கு சென்றார்.
இந்நிலையில், அமெரிக்கா சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் நேற்று மாலை டெல்லி திரும்பியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. சோனியா காந்தி நலமுடன் இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தன.
-
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. டென்ஷனான ராகுல் காந்தி.. கூட்டத்தில் எம்பிக்கள் வாக்குவாதம்! -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட்












Click it and Unblock the Notifications