Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி குடியரசு தின விழா ஊர்வலத்தில் தமிழக அரசின் ஊர்தி இல்லை... மக்கள் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தாண்டு டெல்லி குடியரசு தின விழா ஊர்வலத்தில் தமிழக அரசின் ஊர்தி இடம் பெறவில்லை. இது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தியாவின் 66வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்துள்ளார்.

Tamilnadu not participating in Delhi Republic day celebration

இந்நிலையில், டெல்லி குடியரசு தின விழா ஊர்வலத்தில் இந்தாண்டு தமிழக அரசின் ஊர்தி பங்கு பெறவில்லை. மொத்தம் 16 மாநிலங்களுக்கு மட்டுமே இந்த ஊர்வலத்தில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த 16 மாநிலங்கள் பெயர் பட்டியலில் தமிழகத்தின் பெயர் இடம் பெறவில்லை.

Tamilnadu not participating in Delhi Republic day celebration

கடந்தாண்டு நடந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் இரண்டாம் பரிசைத் தட்டிச் சென்றது தமிழக அரசின் ஊர்தி. ஆனால், சிலப்பல காரணங்களால் இந்தாண்டு தமிழக ஊர்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

முதன்முறையாக அமெரிக்க அதிபர் பார்வையிடும் குடியரசு தின ஊர்வலத்தில் தமிழக அரசின் ஊர்தி இடம் பெறாததால், தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+