Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் “வீடியோ”வில் நடித்த நடிகைக்கு பாலியல் மிரட்டல்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் சாலைகளில் நடந்துசெல்லும் பெண்ணிற்கு ஆண்களால் எந்த விதமான தொந்தரவு ஏற்படுகிறது என்பதை அறிய ரகசிய கேமரா மூலம் படமாக்கப்பட்ட வீடியோவில் தோன்றிய நடிகைக்கு கொலை மற்றும் பாலியல் மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க நடிகை ஷோஷானா பி.ராபர்ட்ஸ், "10 மணி நேரம் ஒரு பெண்ணாக நியூயார்க் நகரில் நடந்துசெல்வது" எனும் 2 நிமிட வீடியோவில் தோன்றியுள்ளார்.

girl

அந்த வீடியோவில் சாலையில் சாதரணமாக நடந்து செல்லும் இவரிடம் பல ஆண்கள் அழகாக இருக்கிறீர்கள், என்னை பார்த்து சிரி போன்ற வாசகங்களை கூறியுள்ளனர்.

அதிகமாய் பேசிய ஆண்கள்:

ஆண்கள் சொல்வதை கவனிக்காமல் சென்ற ஷோஷானாவிடம், "உன்னை ஒருவர் அழகாக இருக்கிறாய் எனச் சொன்னால், அவர்களுக்கு நீ இன்னும் அதிகமாக நன்றி சொல்லவேண்டும்" எனவும் சில ஆண்கள் கூறி இருக்கின்றனர்.

பேசாமல் நடக்கும் நபர்:

வீடியோவின் ஒரு பகுதியில் சாலையில் நடக்கும் நடிகைக்கு அருகே ஒரு நபர் தொடர்ந்து 5 நிமிடங்களுக்கு எதுவும் பேசாமல் நடந்தபடியே இருக்கிறார்.

9.8 மில்லியன் மக்கள்:

பெண்களுக்கும், சிறுபான்மையினருக்கும் சாலைகளில் நடைபெறும் துன்புறுத்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சாரிட்டி ஹோலபாக் என்னும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வீடியோ யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு சுமார் 9.8 மில்லியன் மக்கள் அதனை பார்த்துள்ளனர்.

தொடரும் பாலியல் மிரட்டல்கள்:

சாலையில் நடந்துசென்ற ஷோஷானாவிற்கு முன் நடந்து சென்ற ராப் ப்லிஸ் எனும் நபர் தனது பையில் வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் படமாக்கிய இந்த வீடியோ பிரபலமானதை அடுத்து, அந்த வீடியோவில் தோன்றிய நடிகைக்கு கொலை, பாலியல் மிரட்டல்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்மறையான கருத்துகள்:

இது குறித்து தெரிவித்த ஷோஷானா ராபர்ட்ஸ், "இந்த வீடியோ பிரபலமானதை அடுத்து, பலரும் எனக்கு நேர்மறையான செய்திகளை அனுப்பியிருந்தனர்.

காவல்துறையில் விரைவில் புகார்:

சிலர் மட்டும் கொலை மற்றும் பாலியல் மிரட்டல்கள் அனுப்பியுள்ளனர். நான் பாதுகாப்பாக உணரவில்லை. நான் காவல் துறையில் புகார் அளிக்கும் முடிவில் இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+