For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துருக்கி தலைநகர் அங்காராவில் அமைதியை வலியுறுத்திய பேரணியில் குண்டு வெடித்து 30 பேர் சாவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

அங்காரா: துருக்கியில் அமைதி பேரணியில் நடந்த குண்டு வெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.. பலர் காயமடைந்துள்ளனர்.

தென்கிழக்கு துருக்கியில், அரசப்படைகளுக்கும், குர்தீஷ் இன குழுவிற்கும் நடுவே, யுத்தம் நடந்து வருகிறது. இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர அரசை வலியுறுத்தும் வகையில், தலைநகர் அங்காராவில், பெரும் பேரணி நடத்த இடதுசாரி அமைப்புகள் அழைப்புவிடுத்திருந்தன.

Blast kills at least 20 in Turkish capital

இதையடுத்து துருக்கி நேரப்படி இன்று காலை 10 மணிக்கு, ரயில் நிலையம் ஒன்றின் அருகே, மக்கள் பெருமளவில் கூடியபடி இருந்தனர். அப்போது, அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் பலரது உடல்கள் அறுபட்டு கிழிந்தன. வலியால் அவர்கள் துடித்தனர். அந்த சாலையில் மனித ரத்தம் சிதறி ஓடியது.

இந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

English summary
Two explosions have rocked in the centre of the Turkish capital Ankara, killing at least 20 people and injuring dozens of others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X