Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பொட்டி"யைக் கட்டினார் கேமரூன்.. பழைய படத்தை போட்டு வைரலாக்கிய குசும்பர்கள்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு நேற்றுடன் கேமரூன் டாட்டா காட்டி விட்டார். இந்த நிலையில் அவர் சம்பந்தப்பட்ட ஒரு பழைய படத்தைப் போட்டு சில குசும்பர்கள் சமூக வலைதளங்களி்ல அவரை கலாய்த்து விட்டனர். அந்தப் படமும் வைரல் ஆகி விட்டது.

ஒரு பெரிய அட்டைப் பெட்டியை தூக்கிக் கொண்டு கேமரூன் வீட்டை விட்டு வெளியேறும் படம் இது. இதை வைத்து பாருங்கள்,எவ்வளவு அமைதியாக தனது சாமான்களை தானே தூக்கிக் கொண்டு தனது 10, டவுனிங் தெரு வீட்டைக் காலி செய்து செல்கிறார் பாருங்கள் என்று கொளுத்திப் போட்டு விட்டனர்.

இன்னும் சிலர் பாருங்கள், நாட்டுக்கே இவர் அமைதியான முறையில் ஒரு செய்தியை விட்டுச் செல்கிறார் என்று ஐரோப்பிய யூனியன் விவகாரத்தை சேர்த்துக் கோர்த்து விட்டனர்.

சில இந்தியர்கள் இவரைப் பார்த்து நமது நாட்டு அரசியல் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் போட்டுத் தாக்கினர்.

மொத்தத்தில் இந்தப் படம் படு வேகமாக டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என காட்டுத் தீயாக பரவி விட்டது. ஆனால் உண்மையில் இது பழைய படமாகும். வீட்டைக் காலி செய்தபோது எடுத்த படம் அல்ல.

கடந்த 2007ம் ஆண்டு லண்டன், வடக்கு கென்சிங்டனில் உள்ள தங்களது புதிய வீட்டுக்கு இடம் மாறியபோது எடுத்த படம் இது. இதைத்தான் இப்போது வீட்டைக் காலி செய்வதாக கூறி கிளப்பி விட்டு விட்டனர்.

கேமரூனுக்கே கூட இது செம மேட்டராகத்தான் இருந்திருக்கும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+