Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு 50% வெளிநாட்டவர்கள் வெளியேற விரும்புகிறார்களாம்..

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 50% பேர் அந்த நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேற விரும்புவதாக சமூக ஆய்வு நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகளையும் அதிக அளவு ஊதியத்தையும் வாரி வழங்கி வருகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்... இதனால் எமிரேட்ஸில் பணிபுரிய வெளிநாட்டவர் பலரும் குவிந்து கொண்டிருக்கின்றனர்..

Half of UAE’s expats thinking about relocating

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த மக்கள் தொகையில் 20% பேர் வேலைவாய்ப்புக்காக வந்த வெளிநாட்டவர்தான் என்பதை நினைவில் கொள்வோம்..

ஆனால் தற்போது இந்த நிலைமை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியுள்ளது.. எமிரேட்ஸில் பணிபுரியும் வெளிநாட்டவரில் 50% பேர் உலகின் பிற நாடுகளுக்கு இடம்பெயருவதற்கான யோசனையில் இருக்கிறார்களாம்.. இதற்கான வேலைவாய்ப்புகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

இப்படி லட்சக்கணக்கானோர் எமிரேட்ஸை விட்டு வெளியேற துடிப்பதற்கு சொல்லப்படும் காரணங்களில் ஒன்று வாழ்க்கைச் செலவினம் அதிகம் என்பதுதான்.. குறிப்பாக வாங்குகிற ஊதியத்தில் பாதிக்கு மேல் வீட்டுக்காக செலவிட வேண்டிய நிலை இருக்கிறதாம்..

ஹாங்ஹாங், சிங்கப்பூர், கத்தார் நாடுகளை ஒப்பிடுகையில் வீட்டு செலவினம் என்பது எமிரேட்ஸில் 'செம' காஸ்ட்லிதானாம். இதனால் மிகவும் பணக்கார வெளிநாட்டவர்தான் இங்கே தாக்குப் பிடிக்க முடியும் என்கிற நிலை வந்துவிட்டதாம்..

என்னதான் மிக அதிகமான ஊதியம் வாங்கினாலும் இப்படி செலவு செய்தால் எங்கே சேமிப்பது என்பதுதான் இவர்களின் பொதுவான கேள்வியாகவும் இருக்கிறது..

இப்படியே வெளிநாட்டவர்கள் வெளியேறத் தொடங்கினால் எமிரேட்ஸின் எதிர்காலம் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவும் நேரிடும் என்கின்றனர் சமூகவியல் ஆய்வாளர்கள்...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+