Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்பால் இந்தியாவுக்கு புது சிக்கல்! ஈரான் - அமெரிக்கா மோதலால் தலைவலி! சவுதி - கத்தாரும் முடங்கும்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரானில் தற்போது தற்போது உள்நாட்டு குழப்பம் நீடித்து வருகிறது. அதேபோல் ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல்அதிகரித்து வருகறது. இந்நிலையில் தான் ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஈரானின் உச்சபட்ச தலைவராக அயதுல்லா அலி கமேனி உள்ளார். இந்நிலையில் தான் தற்போது ஈரானில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடி தான் முக்கிய காரணமாகும். ஈரான் மீது அமெரிக்கா ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ஈரான் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தது.

how-would-india-will-be-affect-after-iran-closes-the-strait-of-hormuz-due-to-clash-with-us-details

இப்போது அங்கு நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான ஈரானின் கரன்சியான ரியால் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. ஈரானில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளின் விலை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 28 ம் தேதி தொடங்கிய போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இப்போது வரை சுமார் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இதனால் ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வெடித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ,‛ஈரானில் மக்கள் போராட அனுமதி வழங்க வேண்டும். போராட்டத்தை முடக்க கூடாது. மீறினால் அமெரிக்கா தலையீடு செய்யும்'' என்று எச்சரிக்கை விடுத்தார். ஈரானில் போராட்டத்தை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனால் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க ஈரான் வசம் முக்கிய திட்டம் உள்ளது. அதுதான் ஹார்முஸ் ஜலசந்தி. இது ஈரான் வசம் உள்ளது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி குறுகிய நீர்வழிப்பாதையாகும். ஈரானுக்கும், ஓமனுக்கும் இடையேயான கடலில் 21 மைல்கள் (34 கிலோமீட்டர்) அகலத்தில் அமைந்துள்ளது.

இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் ஒரு நாளைக்கு சுமார் 20 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்கள் செல்கின்றன. இது ஒட்டுமொத்த சர்வதேகச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 25 சதவீதம் ஆகும். குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அமீரகம், குவைத் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு இந்த ரூட் வழியாகவே எண்ணெய் செல்கிறது. இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் இந்தியா, சீனா உள்பட ஆசிய சந்தைகளுக்கான கச்சா எண்ணெயில் 83 சதவீதம் வருகிறது.

இதுதொடர்பாக ஐசிஆர்ஏ லிமிடெட்டின் சீனியர் துணை தலைவராக இருக்கும் பிரசாந்த் வாஷித் கூறுகையில், ‛‛ஹார்முஸ் ஜலசந்தி வர்த்தகம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமாகும். இந்த ஜலசந்தி வழியாக 45 முதல் 50 சதவீதம் வரை இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. மேலும் எல்என்ஜி (Liquefied natural gas) 54 சதவீதம் வரை இந்த வழித்தடத்தில் தான் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு பெரிய அளவில் பிரச்சனை ஏற்படும்'' என்றார். ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்.

நம் நாடு ரஷ்யாவை கைவிட்டால் அதற்கு மாற்றாக சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிடம் தான் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும். ஆனால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடினால் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஈராக்கிடம் இருந்தும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொண்டு வர முடியாது. இதனால் நம் நாட்டுக்கு பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் நம் நாடு மட்டுமின்றி நம்மை போல் சீனாவிலும் கச்சா எண்ணெய் கொண்டு செல்வது பாதிக்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனால் ஈரான் இந்த ஹர்முஸ் ஜலசந்தியை மூடினால் இந்தியா, சீனா உள்பட பல நாடுகள் பாதிக்கப்படும். அதேபோல் சவுதி அரேபியா, கத்தார், ஈராக் உள்பட இஸ்லாமிய நாடுகள் கச்சா எண்ணெயை தான் பிரதான வருவாயாக கொண்டுள்ளன. இதனால் அந்த நாடுகளின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முடங்கும். இது நிதி இழப்புக்கு வழியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+