For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் நடுத்தெருவில் பறந்து வந்த பணம்: ஓடியோடி அள்ளிய மக்கள்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாய் சாலையில் பறந்து வந்த ரூபாய் நோட்டுக்களை மக்கள் ஓடியோடி எடுத்தனர்.

துபாயின் ஜுமைரா பகுதியில் இருக்கும் முக்கிய சாலையில் கடந்த 11ம் தேதி சூறாவளிக் காற்று வீசியது. அப்போது திடீர் என 500 திர்ஹம் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான நோட்டுகள் சாலையில் பறந்து வந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடியோடி பணத்தை அள்ளினர்.

It rains money in Dubai

வாகன ஓட்டிகள் அனைவரும் கை நிறைய பணத்தை எடுத்துச் சென்றனர். அந்த பணம் எங்கிருந்து பறந்து வந்தது, யாருடையது என்றே தெரியவில்லை. சுமார் 2 முதல் 3 மில்லியன் திர்ஹம் வரை காற்றில் பறந்து வந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை விரட்டினர்.

திடீர் என பறந்து வந்த பணம் பற்றி ஒருவர் கூறுகையில்,

என் மனைவி காரில் செல்கையில் திடீர் என சாலையில் பணம் பறந்து வந்துள்ளது. இதை பார்த்த பலரும் வாகனங்களை நிறுத்திவிட்டு பணத்தை அள்ளியுள்ளனர். உடனே என் மனைவி காரில் இருந்து இறங்கி மக்கள் பணத்தை ஓடியோடி எடுத்த காட்சியை வீடியோ எடுத்தார் என்றார்.

English summary
It rained money in Dubai on february 11th. People were seen picking up the money which came flying in the air.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X