நூடுல்ஸ் சாப்பிடும் ஆர்வம்... ஸ்பூனையும் சேர்த்து விழுங்கிய சீனப் பெண்
பெய்ஜிங்: சீனாவில் நூடுல்ஸ் சாப்பிடும் ஆர்வத்தில் ஸ்பூனையும் சேர்த்து விழுங்கி விட்டார் பெண் ஒருவர். அதிர்ஷ்டவசமாக அந்த ஸ்பூனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஸ்பூனுக்கும் ஒன்றும் ஆகவில்லை!
சீனாவின் கிழக்குப் பகுதியில் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்ஷகு நகரைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று ரசித்து ருசித்து நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது நூடுல்ஸை வாயில் போடும் ஆர்வத்தில் கையில் இருந்த ஸ்பூனையும் அவர் சேர்த்து விழுங்கி விட்டார்.

ஸ்பூன் தொண்டைப் பகுதியைத் தாண்டி வயிற்றுப் பகுதிக்குச் சென்று விட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார் அப்பெண்.
அங்கு மருத்துவர்களிடம் தன் நிலையை அவர் விளக்கியுள்ளார். வலி ஏதும் இல்லாமல் சாதாரணமாக இருப்பதைக் கண்டு, முதலில் அப்பெண் விளையாடுவதாக நினைத்த மருத்துவர்கள், பின்னர் சிடி ஸ்கேன் மூலம் வயிற்றுக்குள் ஸ்பூன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சுமார் 2 மணி நேரம் நடந்த ஆபரேஷனுக்குப் பின் அப்பெண்ணின் வயிற்றில் இருந்த ஸ்பூனை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
அதிர்ஷட வசமாக அந்த ஸ்பூன் பெண்ணிற்கு ஆபத்து எதையும் ஏற்படுத்தவில்லை. இல்லை என்றால் கடுமையான வலியும் உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டு இருக்கும் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications