Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

55 வயதான அக்கா கணவரை திருமணம் செய்த 18 வயது பெண்.. காதல் "பூத்தது" எப்படி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அக்காள் உடல்நலம் சரியில்லாமல் படுத்த நிலையில் அவருக்கு உதவியாக சென்ற 18 வயது இளம்பெண், அவரது கணவரான 55 வயது நபரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதுமட்டுமின்றி ‛‛முடி மட்டும் தான் வெள்ளையாக இருக்கு. முடிக்கு ‛டை' அடித்து கொள்ளலாம். ஆனால் அவர் இன்னும் இளமையாக தான் இருக்கிறார். நான் பார்த்த பார்வையில் எனது கணவரை நீங்கள் பார்க்கவில்லை'' என்று அந்த 18 வயது இளம்பெண் அளித்த பேட்டி தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

காதல்.. எப்படி வரும்? எப்போது வரும்? யார் மீது வரும்? என்பது யாருக்கும் தெரியாது. பார்த்த நொடியில் இவன் தான் நம் எதிர்காலம். இவள் தான் நம் எதிர்காலம் என்றுபெண்ணும், ஆணும் நினைக்கும் நொடியில் ஒருவருக்கு இன்னொருவர் மீது காதல் வருகிறது.

18-year-old-girl-gets-marriage-with-55-year-old-brother-in-law

இந்த காதலுக்கு ஜாதி, மதம் என்ற பாகுபாடு கிடையாது. ஆனால் காதலுக்கு வயதும் ஒரு தடையில்லை என்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் தான் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது 18 வயது இளம்பெண் ஒருவர் தனது அக்காள் கணவரான 55 வயது நபரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதோடு தற்போது ஹேப்பியாக இருக்கிறேன் என்று அவர் அளித்த பேட்டி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பிங்க் நிற சேலை கட்டி ஒரு பெண்ணும் தோளில் காவி துண்டு போட்டு, தலை முடி, தாடி, மீசை முடிகள் நரைத்த நிலையில் ஒருவர் ஜோடியாக நிற்கின்றனர்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் அந்த இளம்பெண்ணிடம் உங்களின் கணவர் வயதானவராக தெரிகிறாரே? என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு அந்த இளம்பெண்‛‛என் கண் பார்வையில் எனது அக்காள் கணவர் வயதானவர் இல்லை. அவர் ஸ்மார்ட்டான நபர். என் இடத்தில் இருந்து நீங்கள் அவரை பார்க்க வேண்டும். அவர் வயதானவராக எனக்கு தெரியவில்லை. அவரது முடி மட்டுமே வெள்ளையாக உள்ளது.

அதற்கு ‛டை' அடித்து கொள்ளலாம். அவரது பற்களை வெண்மையாக்கி கொள்ளலாம். இதை செய்வதன் மூலம் அவர் இன்னும் அழகானவராக மாறுவார். நான் அவரை திருமணம் செய்து ஹேப்பியாக இருக்கிறேன். '' என சிரித்தபடி கூறுகிறார். மேலும் இவர்கள் 2 பேருக்கும் எப்படி காதல் ஏற்பட்டது என்பது பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது.

அதாவது 18 வயது இளம்பெண்ணின் அக்காள் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டார். படுத்த படுக்கையாக மாறினார். இதனால் இளம்பெண் தனது அக்காளுக்கு உதவி செய்ய வீட்டுக்கு சென்றார். அங்கு தினமும் சமையல் செய்வது உள்பட பிற உதவிகளை செய்தார். இந்த வேளையில் அக்காளின் கணவருக்கும், இளம்பெண்ணுக்கும் ஏற்பட்ட பழக்கம் இருவருக்கும் இடையேயான பந்தம் நெருக்கமானது. இருவரும் தினமும் அதிக நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

இதனால் 55 வயது நிரம்பிய அக்காள் கணவர் மீது காதலில் விழுந்தார் 18 வயது இளம்பெண். அதன்பிறகு அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர். தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்க்கும் பலரும் அவர்கள் பேசும் மொழியின் உச்சரிப்பை வைத்து உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+