Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென் மாவட்டங்களை கண்டுகொள்ளாத விஜய்.. அவங்க 2 பேருடன் கூட்டணி அமைக்கணும்.. புலம்பும் மா.செ.க்கள்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தவெக தலைவர் விஜய் தென் மாவட்டங்களில் போதுமான கவனத்தை செலுத்தாதது நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரையில் நடத்தப்பட்ட மாநாட்டை தவிர தவெக தலைவர் விஜய் தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் கூட மேற்கொள்ளவில்லை என்றும், நிர்வாகிகள் நியமனத்திலும் கவனம் செலுத்தவில்லை என்றும் குரல்கள் எழத் தொடங்கி இருக்கிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. ஆனால் தவெக தலைவர் விஜய் இன்னும் களத்திற்கே வராமல் இருக்கிறார். திமுக மற்றும் அதிமுக தலைவர்களும், நிர்வாகிகளும் மாவட்ட வாரியாமல் மட்டுமல்லாமல் தொகுதி வாரியாக வார்டு வாரியாக பூத் வாரியாக பணியாற்ற தொடங்கி இருக்கின்றனர்.

TVK Vijay

ஆனால் தவெக தலைவர் விஜய்யோ இன்னும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுக்கூட்டத்தைக் கூட நடத்தவில்லை. கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் ஒரு மாதம் தலைமறைவாகிவிட்ட சூழலில், பின்னர் காஞ்சிபுரம், புதுச்சேரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தான் பொதுக்கூட்டங்களை நடத்தி இருக்கிறார். இதன்பின் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று இருக்கிறார்.

இதன்பின் விஜய்யின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் பணிகளில் விஜய் மூழ்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் கொங்கு மாவட்டத்தில் செங்கோட்டையன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பணிகளை துரிதப்படுத்தி இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் தவெகவை செங்கோட்டையன் லைம்லைட்டிலேயே வைத்திருக்கிறார்.

இப்படியான சூழலில் தவெக தலைவர் விஜய் தென் மாவட்டங்களை பற்றி கொஞ்சம் கவலை கொள்ளவில்லை என்ற குரல்கள் அக்கட்சியினர் மத்தியில் எழத் தொடங்கி இருக்கிறது. ஏனென்றால் மதுரை மாநாட்டுக்கு பின் தென் மாவட்டங்களில் விஜய் எந்த வகையான செயல்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. அண்மையில் தான் மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதனால் விஜய் அடுத்ததாக தென் மாவட்டங்களில் பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்று நிர்வாகிகள் பேசத் தொடங்கி இருக்கின்றனர். அதேபோல் முக்குலத்தோர் சமூக வாக்குகளை கவர்வதற்கு சரியான நபர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் பேச்சுகள் எழுந்துள்ளது.

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தரப்பில் தவெக கூட்டணியில் இணைத்தால், நிச்சயம் சில தொகுதிகளில் வெல்ல முடியும் என்று நம்பத் தொடங்கி இருக்கின்றனர். இதனால் பொங்கலுக்கு பின் கூட்டணி உறுதியானால், தவெகவின் அடுத்தப் பொதுக்கூட்டத்தை தென் மாவட்டங்களில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். இதனால் விஜய்யின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+