சென்னை மாஜி போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்பட 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை பெருநகர முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்பட தமிழகம் முழுவதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : சென்னை பெருநகர முன்னாள் காவல்துறை ஜார்ஜ் உள்பட தமிழகம் முழுவதும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக இருந்த ஜார்ஜ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கரண்சின்ஹா ஐபிஎஸ் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட பின்னர் அவர் மீண்டும் சென்னை காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக ஜார்ஜ்க்கு வேறு பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.
•காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜார்ஜ் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணித்துறை இயக்குநராகவும், தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணித்துறை இயக்குநராக இருந்த கூடுதல் டிஜிபி குடுவாலா காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
•காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக இருந்த மகேந்திரன் லஞ்சம் மற்றும் தமிழக மின்உற்பத்தி மற்றும் விநியோக துறைக்கும் (டான்ஜெட்கோ), காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐஜி சாரங்கன் சென்னை அமலாக்கத்துறை ஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
•காத்திருப்போர் பட்டியலில் இருந்த செந்தாமரை கண்ணன், சென்னை காவலர் தொழில்நுட்ப பிரிவு ஐஜியாகவும், சென்னை நுண்ணறிவு பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த தாமரை கண்ணன், சென்னை குற்றப்பிரிவு, சிஐடி ஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி ஜோஷி நிர்மல் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
•சென்னை நுண்ணறிவு பிரிவு டிஐஜியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரேம் ஆனந்த் சின்கா, சென்னை வடக்கு போக்குவரத்து இணை கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயக்குமார் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
•காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வகுமார் பூக்கடை துணை கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த முத்தரசி சென்னை காவல் நிர்வாக துறை ஏஐஜியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
•திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த விக்ரமன் சென்னை கியூ பிரிவு சிஐடியாகவும், மதுரை மாநகர சட்டம், ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த அருண் சக்தி குமார் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளராகவும், சென்னை சட்டம் ஒழுங்கு ஏஐஜியாக இருந்த திருநாவுக்கரசு சென்னை மாநகர நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
•ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கண்காணிப்பாளராக இருந்த சிபி சக்கரவர்த்தி திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளராகவும், சென்னை சிறப்பு பிரிவு எஸ்பி சிஐடி கண்காணிப்பாளராக இருந்த அர அருளரசு நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளராகவும், சென்னை சிபிசிஐடி கண்காணிப்பாளராக இருந்த ஓம் பிரகாஷ் மீனா ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
•மதுரை அமாலக்கப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் நாகப்பட்டினம் மாவட்ட கண்காணிப்பாளராகவும், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை ஏஎஸ்பியாக இருந்த அருண் பாலகோபலான் திருநெல்வேலி மாவட்ட நாங்குநேரி ஏஎஸ்பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications