முதல்வர் ஜெயலலிதா சிங்கப்பூர் செல்வதாக வெளியான தகவல் வதந்தி - சி.ஆர். சரஸ்வதி
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக பரவும் தகவல் வதந்தியாகும். இதையாரும் நம்ப வேண்டாம் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதா உடல் நலத்துடன் உள்ளார். அவருக்கு அவருக்கு காய்ச்சல் சரியாகிவிட்டது, வழக்கமான உணவுகளை அருந்தி வருகிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் நேற்று இரண்டு முறை அறிக்கை வெளியிட்டது.

மூன்றாவது நாளான இன்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் என்று வீடு திரும்புவார் என்று தகவல் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் அவர் மேல் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த தகவல் அதிமுக தொண்டர்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.
இது குறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, முதல்வர் ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக பரவும் தகவல் வதந்தியாகும். இதையாரும் நம்ப வேண்டாம். அம்மா மிகவும் நலமாக உள்ளார் என்று கூறியுள்ளார். தொண்டர்கள் கவலை அடைய வேண்டாம், அம்மா விரைவில் வீடு திரும்புவார் என்றும் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications