டிச.18க்குப் பின் ஜெ.வுக்கு ஒரு நாள்கூட ஜாமீன் நீட்டிப்பு கிடையாது: தலைமை நீதிபதி எச்சரிக்கை
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு மற்றும் தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் உரிய ஆவணங்களை டிசம்பர் 18-ந் தேதிக்குள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாக வேண்டும் என்று ஜெயலலிதா தரப்புக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 18-ந் தேதிக்குள் ஆவணங்களைத் தாக்கல் செய்யாவிட்டால் ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுவிடும் என்றும் தலைமை நீதிபதி தத்து எச்சரித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அனைவரும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அம்மனு நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நான்கு பேரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற விவாத விவரம்:

- ஜெயலலிதா ஜாமீன் மனு மீது ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதா சார்பாக இன்று காலை 11.30 மணிக்கு மூத்த வழக்கறிஞர் பாலிநாரிமன் ஆஜரானார்.
- பாலி நாரிமன் தனது வாதத்தின் தொடக்கத்தில், கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்காதது தவறு என்று கூறி பல்வேறு வழக்குகளை உதாரணம் காட்டி வாதிட்டார்.
- பின்னர் தலைமை நீதிபதி தத்து, "எவ்வளவு காலத்துக்குள் ஜெயலலிதாவால் ஆவணங்களைத் தாக்கல் செய்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை எதிர்கொள்ள முடியுமா?" என்றும் நாரிமனிடம் கேள்வி எழுப்பினார்.
- இதற்கு "6 வார காலத்துக்குள்" ஆவணங்களைத் தாக்கல் செய்ய முடியும் என்று நாரிமன் பதிலளித்தார்.
- மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கை முடித்துவிட முடியும் என்றும் நாரிமன் கூறினார்.
- இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி தத்து, வழக்கறிஞர் பாலி நாரிமனின் உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்கிறோம். இதற்காக அவர் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றார்.
- இதன் பின்னர் நாரிமனிடம், நீங்கள் மேல்முறையீட்டு வழக்கு ஆவணங்களை 2 மாதத்துக்குள் தயார் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் 3 மாதத்துக்குள் இந்த விசாரணையை நடத்தி முடிக்க கர்நாடகா உயர் நீதிமன்றத்தைக் கோர வேண்டும். 2 மாதத்துக்குள் உங்களால் மேல்முறையீட்டு ஆவணங்களை தயார் செய்ய முடியவில்லை எனில் நாங்கள் அதற்கு மேல் ஒருநாள் கூட நீட்டிப்பு தரமாட்டோம் என்றார்.
- இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கும் ஜாமீன் அளித்து சுருக்கமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
- இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- ஜெயலலிதா வழக்கறிஞர் நாரிமனிடம் மீண்டும் ஒரு முறை தலைமை நீதிபதி தத்து, "வழக்கு ஆவணங்களை டிசம்பர் 18-ந் தேதி தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.. நாங்கள் ஜாமீனை மேலும் ஒரு நாள் கூட நீட்டிக்கமாட்டோம்" என்று கூறினார்.
- டிசம்பர் 18-ந் தேதிக்குள் மேல்முறையீட்டு வழக்கின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை உடனே உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிடும் என்று மீண்டும் மீண்டும் நாரிமனுக்கு நினைவூட்டினார் தலைமை நீதிபதி தத்து.
- ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்துக்குள் இருந்த அதிமுக வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications