Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக முதல்வர் வேட்பாளர் ரஜினியா? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

ரஜினி பாஜகவிற்கு வந்தால் சேர்ந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் முதல்வர் வேட்பாளரா என்பதை கட்சிதான் முடிவு செய்யும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கரூர்: நடிகர் ரஜினி பாஜகவில் சேர்ந்தால் முதல்வர் வேட்பாளராக என்பதை கட்சிதான் முடிவு செய்யும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக மூலமாக காலூன்றுவதற்கு பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தற்போது அதிமுக இரண்டாக பிளவுபட்டு அதன் வெற்றி சின்னமான இரட்டை இலையும் முடங்கி போயுள்ளது. இந்தச் சூழலில் நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு இழுக்கும் வேலைகளையும் பாஜக மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. ரஜினிகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் பாஜக தயாராக இருக்கிறது என்று பேச்சு அடிபடுகிறது.

bjp announce rajini as a cm candidates? pon.Radhakrishnan

இந்நிலையில் கரூரில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. எல்லா தரப்பினரும், அரசியல்வாதிகளும் பா.ஜ.க.வுக்கு வரவேண்டும். தமிழகத்தில் விரைவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ரஜினிகாந்த் இந்த கால கட்டத்தில் ஒரு நல்ல அரசியல் முடிவை எடுத்தால் மகிழ்ச்சி. அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி.

அப்போது ரஜினி பாரதிய ஜனதாவில் சேர்ந்தால் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பொன்.ராதாகிருஷ்ணன், ரஜினி மிகவும் பிரபலமானவர். எனவே முதல்வர் வேட்பாளரா என்பதை கட்சிதான் முடிவு செய்யும் என்றார்.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், அய்யாக்கண்ணுவின் போராட்டம் குறித்து கேட்டபோது, தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா, இல்லையா என்ற கேட்க தோன்றுகிறது. விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது அந்தந்த மாநில அரசின் கடமை.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு வைரவிழா எடுப்பது அவர்களின் சுயநலத்திற்காகத்தான். தமிழகத்தில் தி.மு.க. தனது பலத்தை இழந்து வருகிறது. மதவாத சக்திகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரஜினி பா.ஜ.க.வில் சேரக்கூடாது என்று கூறும் திருமாவளவன் ஜாதிய சக்திகளை ஊக்குவிக்கலாமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+