ஆர்கே நகரில் பாதாளம் வரை பாயும் பணம்- 3-வது இடத்துக்கு மல்லுக்கட்டும் நாம் தமிழர், பாஜக, சிபிஎம்
ஆர்கே நகரில் பணம் பாதாளம் வரை பாய்ந்து கொண்டிருப்பதால் 3-வது இடத்துக்கு நாம் தமிழர், பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன.
சென்னை: ஆர்கே நகர் தொகுதியில் அனைத்து கட்சிகளும் சர்வ சாதாரணமாக பணத்தை இறக்கிவிட்டுள்ள நிலையில் 3-வது இடம் கிடைத்தால் கூட போதும் என்கிற நிலையில் நாம் தமிழர் கட்சி, பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் வீடு வீடாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக மற்றும் ஓபிஎஸ் அதிமுகவுக்கு இடையேதான் கடும் போட்டி என கூறப்படுகிறது. இந்த இருதரப்புக்கும் இடையேயான வாக்கு வித்தியாச சதவீத இடைவெளியை அதிகப்படுத்துவதன் மூலம் திமுக வெல்ல முடியும் என வியூகம் வகுக்கிறது.

வாக்கு சதவீத வித்தியாசம் குறையுமே
அதேநேரத்தில் ஓபிஎஸ் அணிக்கும் தினகரன் கோஷ்டிக்கும் இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் மிக அதிகமாக இருக்கிறது. இதை சமாளிக்கத்தான் பணத்தை வாரி இறைத்து வருகிறாராம் தினகரன். இதனால் வாக்கு சதவீத வித்தியாசம் குறையலாம் என தினகரன் கோஷ்டி எதிர்பார்க்கிறது.

நாம் தமிழர் கங்கணம்
இந்த பெருமுதலைகளுக்கு மத்தியில் சிக்கிய கட்சிகளாக நாம் தமிழர், மார்க்சிஸ் மற்றும் பாஜக ஆகியவை உள்ளன. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் பாஜகவை விட கூடுதல் வாக்குகள் பெற்று நாம் மண்ணின் பிள்ளைகள் என்பதை நிரூபிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது.

மாயாஜாலம் பேசும் பாஜக
பாஜகவோ கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற மாயாஜாலம் பேசிக் கொண்டு வீதி வீதியாக வலம் வருகிறது. ஆர்கே நகர் தொகுதி உழைக்கும் மக்களின் தோழர் என்ற நம்பிக்கையில் மார்க்சிஸ்ட் கட்சியின் லோகநாதன் வலம் வருகிறார்.

3-வது இடம் குறிக்கோள்
இந்த மூன்று கட்சிகளும் இப்போது 3-வது இடத்தை பிடித்துவிட்டாலே நமக்கு வெற்றிதான் என்கிற நம்பிக்கையில் இருக்கின்றன. ஆம் 3-வது இடத்துக்காகத்தான் இந்த 3 கட்சிகளும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன.
-
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications