Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரலாறு படைக்கும் இளைஞர்கள்.. செல்போன் ஒளி வெள்ளத்தில் 4வது நாளாக மெரீனா ஸ்தம்பிப்பு !

மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தால் சென்னை மெரீனா கடற்கரை 4வது நாளாக ஸ்தம்பித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரீனாவில் 4வது நாளாக செல்போன் வெளிச்சத்திலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இளைஞர்கள், மாணவர்கள் எழுச்சியால் மெரீனா கடற்கரை ஸ்தம்பித்துள்ளது.

சென்னை மெரீனா கடற்கரையில் அறவழி போராட்டம் மூலம் இளைஞர் படை மீண்டும் மீண்டும் வரலாறு படைத்து வருகிறது. மெரீனாவில் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் போராட்டம் வீறு கொண்டு நடந்து வருகிறது.

Chennai Marina beach shined 4th day

முதல் நாள் போராட்டத்தின்போது போராட்டத்தை ஒடுக்குவதற்காக விளக்குகளை அணைத்து காவல்துறை பயமுறுத்திப் பார்த்தது. ஆனால் இளம் படையாச்சே.. செல்போனை எடுத்து அதில் உள்ள டார்ச்சை இயக்கி உயர்த்திப் பிடித்த காவல்துறையை அதிர வைத்தது.

ஜல்லிக்கட்டு புரட்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான இளைஞர் பட்டாளத்தின் செல்போன் வெளிச்சத்தில் மீண்டும் மெரீனா ஒளிர்ந்து மக்கள் சக்தியை மகத்தான வெளிச்சத்தில் எடுத்துக் காட்டி அசர வைத்து வருகிறது. இன்றும் தொடர்ந்து 4வது நாளாக செல்போன் வெளிச்சத்திலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் எனவும் அவர்கள அறிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+