Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லா போஸ்டரிலும் என் மகன் படம் இருக்கனும்... திருநாவுக்கரசர் உத்தரவால் காங்.-ல் சலசலப்பு

காங்கிரஸ் கட்சியில் மகனை முன்னிறுத்த முயற்சித்திருக்கிறார் திருநாவுக்கரசர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தம்மை வரவேற்று ஒட்டப்படும் அத்தனை போஸ்டரிலும் மகன் ராமச்சந்திரன் படம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தமிழக காங். கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் உத்தரவிட்டிருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக அரசியலில் வாரிசுகளை களமிறக்குவதும் அந்த வாரிசை கட்சியினர் வளைப்பதும் அனைத்து அரசியல்கட்சிகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் காங்கிரசும் விதிவிலக்கல்ல.

Controversy over Thirunavukkarasar's new policy

காங்கிரசின் தலைவர்களாக வருபவர்களின் வாரிசுகள் திடீரென முக்கியத்துவம் பெறுவார்கள். வாரிசின் புகைப்படம் இல்லாத போஸ்டர்களைப் பார்ப்பது அரிது. அந்த வகையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தற்போதைய தலைவர் திருநாவுக்கரசர், தனது மகனை லைம்லைட்டுக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறார்.

அதாவது தமிழகத்தை 6 மண்டலங்களாகப் பிரித்து காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தி வருகிறார் திருநாவுக்கரசர். இதன்படி தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யும் திருநாவுக்கரசரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்களால் அமர்க்களப்படுத்தினார்கள்.

அனைத்து போஸ்டர்களிலும் திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரனின் புகைப்படம் இருக்க வேண்டும் என சென்னையிலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப அனைத்து போஸ்டர்களிலும் மின்னினார் திருநாவின் மகன் ராமச்சந்திரன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+