Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. மாஜி டிரைவர் கனகராஜ் இங்கதான் பலியா… சாலை விபத்து நடத்த இடத்தில் எஸ்பி தீவிர ஆய்வு

கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் மாஜி டிரைவர் கனகராஜ் உயிரிழந்த இடத்தை நீலகரி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா ஆய்வு மேற்கொண்டார்.

Subscribe to Oneindia Tamil

சேலம்: கொடநாடு பங்களா காவலாளியை கொலையில் தொடர்பு இருப்பதாக தேடப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்த இடத்தை எஸ்பி முரளி ரம்பா ஆய்வு மேற்கொண்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதா மற்றும் சசிகலா தொடர்பான ரகசிய ஆவணங்களை கொள்ளையடிக்க இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தனிப்படைகள்

தனிப்படைகள்

தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில், கொலையின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் மாஜி கார் டிரைவர் திடிரென சாலை விபத்தில் பலியானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

மர்மம்

மர்மம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் நடைபெற்ற ஒரு விபத்தில் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தார் என்றால் விபத்து நடந்த இடம் எது என்று இன்னும் தெரியவில்லை. எந்த இரு வாகனத்திற்கும் இடையே விபத்து நடைபெற்றது என்ற தகவலையும் போலீசார் இதுவரை வெளியிடவில்லை என்று கனகராஜின் சகோதரர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

எஸ்பி ஆய்வு

எஸ்பி ஆய்வு

இந்நிலையில், விபத்து நடைபெற்ற ஆத்தூரில் நீலகரி மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா இன்று ஆய்வு மேற்கொண்டார். கனகராஜ் என்கவுண்டரில் இறந்தார் என்ற குற்றச்சாட்டும் சேலம்வாசிகளால் வைக்கப்பட்டு வந்த நிலையில் முரளி ரம்பா தீவிர ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்.

துருவி துருவி

துருவி துருவி

இந்தக் கொலை வழக்கில் 11 பேர் தேடப்பட்டு வந்த நிலையில், 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிலரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் ஜெயலலிதா எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து மேலும் அதிக தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+