Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஃப்ரீ செக்ஸ்' விமர்சனம்: பீட்டா ராதாராஜனின் வீட்டை முற்றுகையிட்ட தேமுதிகவினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் போராடும் இளைஞர்களை ஃப்ரீ செக்ஸை முன்வைத்து கொச்சைப்படுத்தி விமர்சித்த பீட்டா ஆதரவாளரான ராதா ராஜனின் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் இளம் தலைமுறையினர் தொடர்ந்து 6வது நாளாக போராடி வருகிறார்கள். அறவழிப் போராட்டம் நடத்தும் அவர்களை நாடே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

Free s*x comment: DMDK men seige Radharajan's residence

உன்னத நோக்கத்துடன் போராடும் அவர்களை ஃப்ரீ செக்ஸை முன்வைத்து கொச்சைப்படுத்தி விமர்சித்த பீட்டா ஆதரவாளரான ராதா ராஜன் மீது நேற்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்தார்.

இந்நிலையில் தேமுதிகவினர் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ராதாராஜனின் வீட்டை முற்றைகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இளம் தலைமுறையினர் அரசியல் தலையீடு இல்லாமல் புதிய முயற்சியில் இறங்கியுள்ளதை விமர்சித்த ராதாராஜனுக்கு கண்டனம் தெரிவித்து அவரது வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராதாரஜனின் ஃப்ரீ செக்ஸ் கருத்து பலரையும் முகம் சுளிக்க வைத்ததுடன் அவர் மீது கோபம் ஏற்பட வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் அவரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+