Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா வீடுகள் உட்பட 32 இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் அதிரடி ரெய்டு!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படம் நாளை ரிலீஸாக உள்ளது. பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள புலி படம் கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்து எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் சென்றுள்ளது.

IT officials raid Vijay, Puli team, Nayanthara, Samantha's houses

இதையடுத்து வருமான வரித்துறையினர் சென்னையில் உள்ள விஜய்யின் வீடு, புலி படக்குழுவினரின் வீடுகள் என 25 இடங்களில் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் நயன்தாராவின் கொச்சி வீட்டிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். நயன்தாரா தவிர்த்து நடிகை சமந்தாவின் சென்னை மற்றும் ஹைதராபாத் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். விஜய், நயன்தாரா, சமந்தா, புலி படக்குழுவினரின் வீடுகள் என மொத்தம் 32 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

புலி படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+