Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி அறிவிப்பு சிக்கனையும் விட்டு வைக்கவில்லை.. நாட்டு கோழி விலை விர்.. அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

மோடியின் பணம் குறித்த அறிவிப்பு, நெல்லை மாவட்டத்தில் நாட்டுக்கோழி விலை உயரும் அளவுக்கு கொண்டு சென்று விட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நாட்டு கோழி விலை அதிகரித்துள்ளதால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் நாட்டு கோழி வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் அங்கு கொண்டு வரப்படும் நாட்டு கோழிகளை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.

கடந்த வாரம் வரை ஒரு கிலோ நாட்டு கோழி ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பணப் பற்றாக்குறை பிரச்சினை ஏற்பட்ட காலத்தில் சரிவர சம்பளம் கிடைக்காததால் பெண்கள் வீட்டில் வளர்த்து வந்த ஆடு, கோழிகளை விற்பனை செய்தனர்.

இதனால் கோழிகளுக்கு இப்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல் நாட்டு கோழி வரத்து சந்தைக்கு குறைந்தது.

நாட்டு கோழி வரத்து குறைவு

நாட்டு கோழி வரத்து குறைவு

கடந்த இரண்டு மாதங்களுககு முன்பு வரை தினமும் சராசரியாக 1000 நாட்டு கோழிகள் வரை சந்தைக்கு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக 100 முதல் 150 வரை மட்டுமே நாட்டு கோழிகள் சந்தைக்கு வருவதாக கூறப்படுகிறது.

வெளியூர்களுக்கு செல்கிறது

வெளியூர்களுக்கு செல்கிறது

தற்போது இங்கிருந்து சந்தைக்கு கொண்டு செல்லப்படும் கோழிகளை திருப்பூர், கரூர், சேலம் வியாபாரிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். சேவல் கோழி கிலோ ரூ.350க்கும், முட்டையிடும் கோழிகள் ரூ.400க்கும் வாங்குகின்றனர்.

குஞ்சுகள் பொறிக்கவில்லை

குஞ்சுகள் பொறிக்கவில்லை

கோவில்பட்டி, தூத்துககுடி, பாளையங்கோட்டை வியாபாரிகளும் முட்டையிடும் கோழிகளை ரூ.400 கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதனால் உள்ளூர் சந்தையிலும் இதே விலை உயர்வு உள்லதாக கூறப்படுகிறது. ஆலங்குளம் பகுதியில் நாட்டு முட்டைகள் ரூ.12க்கு விற்கப்படுவதால் அதை பொறிக்க வைத்து குஞ்சுகளை உருவாக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

பண மதிப்பு அறிவிப்பு

பண மதிப்பு அறிவிப்பு

மோடியின் பணம் குறித்த அறிவிப்பு, நெல்லை மாவட்டத்தில் நாட்டுக்கோழி விலை உயரும் அளவுக்கு கொண்டு சென்று விட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+