Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

31 எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை! ஒன் இந்தியா தமிழ் செய்தியை உறுதி செய்தார் முதல்வர் ஓபிஎஸ்!

சசிகலாவுக்கு எதிராக எம்எல்ஏக்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என ஒன் இந்தியா தமிழ் இன்று செய்தி வெளியிட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வர் இன்று திடீர் தியானம் மேற்கொண்டார். சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ், எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என ஒன் இந்தியா தமிழ் செய்தி தளம் தான் முதலில் செய்தி வெளியிட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் ஓபிஎஸ் மேற்கொண்டுள்ள இந்த திடீர் அமைதிப் புரட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பதவி ஏற்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

OPS conforming one india tamil news which was telling that OPS against Sasikala

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக பதவி வகித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக கண்களை மூடி அவர் தியானம் மேற்கொண்டு செய்தார். தற்போது தமிழக அரசியலில் நிலவி வரும் பரபரப்புகளுக்கு இடையே ஓபிஎஸ் ஜெ. நினைவிடத்தில் மேற்கொண்டுள்ள இந்த தியானம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

முதல்வர் ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக 31 எம்எல்ஏக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக ஒன் இந்தியா தமிழ் முதலில் செய்தி வெளியிட்டது. ஒன் இந்தியா தமிழின் செய்தியை உறுதி செய்யும் வகையில் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓபிஎஸ் தியானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+