தேர்தலில் யாருக்கு ஆதரவு? நிருபர்களின் கேள்விக்கு ஏர்போர்ட்டில் ரஜினி சொன்ன ''பதில்''
சென்னை: சட்டசபை தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று நடிகர் ரஜினிகாந்த்திடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர், தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்பட குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கபாலி சூட்டிங்கில் பிசியாக உள்ள ரஜினிகாந்த், இன்று மதியம் சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அப்போது அவரிடம், சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கு உங்கள் ஆதரவு என நிருபர்கள் கேட்டபோது, பதிலளிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துவிட்டு காரில் ஏறி சென்றுவிட்டார்.

அதேநேரம், தேசிய விருதுகள் குறித்து முன்னதாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரஜினி, சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது பெறும் இளையராஜாவுக்கு பாராட்டுகளை தெரிவித்ததோடு, சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை 'விசாரணை' பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
விசாரணை திரைப்படம் ரிலீசான உடனேயே, தமிழில் பார்த்த சிறந்த திரைப்படம் இது என்று ரஜினிகாந்த் டிவிட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications