'தென்னிந்திய நடிகர் சங்கப் பெயரை 'தமிழ்நாடு நடிகர் சங்கம்' என மாற்றுங்கள்!' - ரஜினிகாந்த்
இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், முதல் வேலையாக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்பதை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றுங்கள் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் சங்கத் தேர்தலில் காலையிலேயே வாக்களித்த ரஜினிகாந்த், நடிகர் சங்கத்தினருக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.
ரஜினியின் முழுப் பேச்சு:
அனைவருக்கும் வணக்கம். நடிகர்கள் ஒரே குடும்பம், ஒரே இனம், ஒரே ஜாதி... தேர்தலில் யார் வென்றாலும் தோற்றாலும் நமக்குள் ஒற்றுமை முக்கியம். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
கடந்த சில தினங்களாக சில வாக்குவாதங்கள் நடந்துவிட்டன. சரி, நடந்தது நடந்துவிட்டது. அதுக்காக நமக்குள் ஒற்றுமை இல்லை என ஊடகங்கள் நினைத்துவிடக் கூடாது.
ஒரு போட்டி வந்துவிட்டது. வெரிகுட். யாரு ஜெயிச்சாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
யாரு ஜெயிச்சாலும் அவர்களுக்கு இரண்டு வேண்டுகோள்.
முதல் வேண்டுகோள், யாரு ஜெயிச்சி வந்தாலும் முதலில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பேரை எடுத்துவிட்டு, தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று மாற்றிவிடுங்கள்.
அடுத்து, இந்தத் தேர்தலில் நல்லா சிந்திச்சு, ஆயிரம் முறை யோசிச்சி வாக்குறுதிகள் கொடுத்திருப்பீர்கள். ஜெயிச்சி வந்தவங்க, உயிரே போனாலும் சரி அந்த வாக்குறுதிகளை நிறைவேத்தனும். அப்டி நிறைவேத்த முடியாமபப் போனா உடனே ராஜினாமா செஞ்சிடுங்க. அது உங்க மனசுக்கும் நிம்மதி. உங்களுக்கும் நற்பெயரைக் கொடுக்கும். நல்ல எடுத்துக் காட்டாகவும் இருப்பீங்க.
நன்றி, வணக்கம்!"
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications