Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐடி சம்மன் அனுப்பிய நிலையில்... ராமமோகன் ராவுக்கு சுகவீனம்... மருத்துவமனையில் அனுமதி

ராம மோகன ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியின் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் பல நூறு கோடி ரூபாய் பணம், கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ரெட்டிக்கும் ராம மோகன் ராவுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து புதன்கிழமையன்று அதிகாலையில் ராம மோகன் ராவ் வீடு, அவரது மகன் விவேக், சம்பந்தி வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

Rama mohan rao hospitalized

ராம மோகன ராவின் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில்,பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. சம்பந்தி வீடு, மகன் வீடுகளிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகையை கைப்பற்றியுள்ளனர்.

ராம மோகன ராவின் மகனான விவேக், பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்வு செய்ததை ஒத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு அளித்திருந்த அரசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராம மோகன் ராவ் வீட்டில் கைப்பற்றிய பொருட்கள், ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் வருமான வரித்துறையின் ஈடுபட்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்பதுஉறுதியானால் அதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். ராமா மோகன் ராவை காண அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ யாரும் வரவில்லை. 3 நாட்களாக முடங்கிப் போனார் ராம மோகன் ராவ்.

இதனிடையே நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராம மோகன் ராவ், அவரது மகன் விவேக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விவேக் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்நிலையில் இன்று காலை திடீரென ராம மோகன ராவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆனால் அவருக்கு என்ன மாதிரியான உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Former Chief secretary Rama mohan rao hospitalized today. He admitted ICU in Ramachandra hopital at Porur.

60 words

ராம மோகன ராவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆனால் அவருக்கு என்ன மாதிரியான உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+