Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த 8ம் வகுப்பு மாணவி கழுத்தறுத்து கொலை: வாலிபர் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த 8ம் வகுப்பு மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சேலம் அழகாபுரம் வன்னியர் நகரில் வசித்து வருபவர் துரைராஜ்(48). தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது மனைவி கஸ்தூரி(40) துணிக்கடையில் வேலை பார்க்கிறார். அவர்களின் மகள்கள் ஸ்ரீஹரிணி (22), தேஜாஸ்ரீ (13). ஸ்ரீஹரிணி பி.இ. படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தேஜாஸ்ரீ அழகாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

ஸ்ரீஹரிணியின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை பார்க்க கஸ்தூரி சென்னை சென்றார். வியாழக்கிழமை காலை துரைராஜ் வேலைக்கும், தேஜாஸ்ரீ பள்ளிக்கும் சென்றனர். துரைராஜ் இரவு வீட்டுக்கு வந்தபோது தேஜாஸ்ரீ கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸும் வரவழைக்கப்பட்டது. தேஜாஸ்ரீ ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வழியில் உயிர் இழந்தார்.

வீட்டில் பீரோ திறந்து கிடந்த போதிலும் நகைகள் எதுவும் திருடு போகவில்லை. மாறாக தேஜா வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மட்டும் தான் திருடு போயிருந்தது.

தேஜா பள்ளியில் இருந்து மாலை 5.30 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது புதிய பல்சர் பைக்கில் ஹெல்மெட் அணிந்த வாலிபரும், மங்கு குல்லா அணிந்த வாலிபரும் வந்து தேஜாவின் வீட்டில் அமர்ந்து அவருடன் பேசியுள்ளனர். இரவு 7.10 மணிக்கு அவர்கள் வேகமாக பைக்கில் ஏறி சென்றதை அக்கம்பக்கதினர் பார்த்துள்ளனர். மங்கி குல்லா அணிந்த வாலிபரும் தேஜாஸ்ரீயின் அக்கா ஸ்ரீஹரிணியும் காதலித்துள்ளார்கள். அவர் அடிக்கடி ஸ்ரீஹரிணியை பார்க்க வீட்டுக்கு வந்து வெளியே நின்று பேசியதை பலரும் பார்த்துள்ளனர்.

Teenage girl found dead in Salem

இந்நிலையில் துரைராஜ், கஸ்தூரி இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஸ்ரீஹரிணி சென்னை சென்றதுடன் அந்த வாலிபருடன் பேசுவதை நிறுத்துவிட்டார். இதனால் அந்த வாலிபர் தேஜாஸ்ரீயை அடிக்கடி சந்ததித்து அக்கா இருக்கும் இடம், செல்போன் எண்ணை கொடு என்று கேட்டு வந்துள்ளார். நேற்றும் அவ்வாறு வீட்டுக்கு வந்து ஸ்ரீஹரிணியின் செல்போன் எண்ணை கேட்டு தேஜா கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் தேஜாவை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை இன்று காலை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பரையும் தேடி வருகிறார்கள். தேஜாஸ்ரீ கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து அவர் படித்த பள்ளி ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்று அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+