தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு: வாசன், ஞானதேசிகன் போட்டியில்லை
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ளார். இந்த தேர்தலில் தலைவர் வாசனும், ஞானதேசிகனும் போட்டியிடவில்லை.
மக்கள் நல கூட்டணி, தேமுதிக ஆகியவை இணைந்துள்ள கூட்டணியில் கூட்டணி வைத்துக்கொண்டுள்ளார் ஜி.கே.வாசன். அக்கூட்டணியில் வாசன் கட்சிக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் வாசன் இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

26 வேட்பாளர் பட்டியல் விவரம்
ராயபுரம் - பிஜு சாக்கோ
மயிலாப்பூர் - முனவர் பாஷா
காட்பாடி - டி.வி.சிவானந்தம்
அணைக்கட்டு - பழனி
வாணியம்பாடி - ஞானசேகரன்
பர்கூர் - ராஜேந்திரன்
கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
திருக்கோவிலூர் - கணேஷ்
சங்ககிரி - செல்வகுமார்
சேலம் வடக்கு - தேவதாஸ்
நாமக்கல் - இளங்கோ
பெருந்துறை - சண்முகம்
மேட்டுப்பாளையம் - சண்முக சுந்தரம்
மடத்துக்குளம் - மகேஸ்வரி
கிருஷ்ணராயபுரம் (தனி) - சிவானந்தம்
முசிறி - ராஜேந்திரன்
கடலூர் - சந்திரசேகர்
பூம்புகார் - சங்கர்
பாபநாசம் - ஜெயகுமார்
திருமயம் - சிதம்பரம்
மேலூர் - பாரத் நாச்சியப்பன்
கம்பம் - ராமச்சந்திரன்
விளாத்திகுளம் - கதிர்வேல்
கிள்ளியூர் - ஜான்ஜேக்கப்
ஸ்ரீவைகுண்டம் - விஜயசீலன்
தென்காசி - சார்லஸ்
கூட்டணி அமைப்பதற்கு செய்த காலதாமதம் போலவே வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கும் காலதாமதம் செய்தார் ஜி.கே. வாசன். மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக ஆகிய கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு விட்டு பிரச்சாரம் செய்து வரும் நிலையில் ஒருவழியாக இன்றைய தினம் 26 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார் வாசன். இந்த தேர்தலில் வாசன் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபைத் தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்து தொகுதி பங்கீடு வரை தமாகாவுக்காக உழைத்த ஞானதேசிகனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில், ஜி.கே.வாசன் போல, ஞானதேசிகனும் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications