"என்னால முடியல!" புலம்பி தள்ளிய அமெரிக்க வாழ் இந்தியர்! பெரிய பதவியில் இருந்தாலும் நிம்மதி இல்லையாம்
வாஷிங்டன்: அமெரிக்காவுக்குப் போனால் வாழ்க்கையே மாறிவிடும் என்பதே பெரும்பாலான இந்தியர்களின் கனவாக இருக்கிறது. ஆனால், உண்மை அப்படி இல்லை. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சூழலே இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்காவில் ஐடி நிறுவனம் ஒன்றில் மேனேஜராக வேலை செய்யும் நபர் ஒருவர், அங்கு தான் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்துப் புலம்பியுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வந்தது. குறிப்பாகத் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்வோர் ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்கா சென்று வந்தனர். அமெரிக்கா சென்றால் வாழ்க்கை மாறிவிடும் எனப் பலரும் கருதியதால் அமெரிக்கா செல்ல ஆர்வம் காட்டினர்.

சிக்கல்
இருப்பினும், அங்கும் இந்தியர்களுக்குப் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. இதற்கிடையே அமெரிக்காவில் தான் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து அங்கு வேலை செய்யும் ஒரு ஐடி துறை மேனேஜர் புலம்பித் தள்ளி இருக்கிறார். இந்தியர்கள் என்றாலே இப்படி தான் இருப்பார்கள் என அமெரிக்காவில் பரவியுள்ள சில தவறான கருத்துகள் காரணமாகத் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் வெறுக்கப்படுவதாகவும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
H-1B விசா மூலம் அமெரிக்கா சென்று படிப்படியாக உயர்ந்து, இப்போது உயர் பதவியில் இவர் இருக்கிறார். அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக, குறிப்பாக டெக் துறையில் பணிபுரியும் இந்தியர்களுக்கு எதிராக, அதிகக் கோபம் இருப்பதாக இவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில், "நான் H1B விசாவில் அமெரிக்கா வந்தேன்.. L5இல் இருந்து L7ஆக உயர்ந்தேன். நான் எப்போதும் எனது சக ஊழியர்களை நேர்மையாக நடத்தினேன். பல்வேறு தரப்பினருக்கும் வழிகாட்டினேன். சிறந்தவர்களை மட்டுமே பணியமர்த்தினேன். நிறம், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டியதே இல்லை.
வருத்தம்
எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் ஊழியர்களுக்கு உதவியும் வழிகாட்டியும் வந்த போதிலும், இணையத்தில் பரப்பப்படும் சில தவறான கருத்துகளால் நான் பாதிக்கப்பட்டு வருகிறேன். சமீபகாலமாகத் தொழில்நுட்பத் துறையில் உள்ள இந்தியர்கள் மீது கோபம் அதிகரித்துள்ளது. நாங்கள் எங்கள் ஆட்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துகிறோம் அல்லது சாதி அமைப்பை இங்கு கொண்டு வருகிறோம் என்று சிலர் கூறுகிறார்கள். நான் என் வாழ்க்கையில் இதுவரை இப்படி நடந்து கொண்டதே இல்லை. ஆனால், என்னையும் இப்படி முத்திரை குத்துவதால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
தனிமை
இதனால் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்த போதிலும், இப்போது தனிமையை உணர ஆரம்பித்துள்ளேன். நான் அமெரிக்கர் போல வாழவே அமெரிக்க வந்தேன்.. ஆனால், இப்போதும் என்னைச் சுற்றி பெரும்பாலும் இந்தியர்கள் இருப்பதால் நான் இன்னும் இந்தியாவில் வாழ்வது போல் உணர்கிறேன். ஒருவேளை நான் எதாவது தவறு செய்தேனா? தொழில்நுட்பத் துறையில் ஒரு இந்தியனாக இருப்பது மக்கள் வெறுக்கும் ஒன்றாக மாறியது துரதிர்ஷ்டவசமானது" என்று பதிவிட்டுள்ளார்.
டிரெண்டிங்
அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாது. பல்வேறு தரப்பினரும் இதற்குத் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு தரப்பினர், இதையெல்லாம் கண்டு கொள்ள வேண்டாம் என்றும் இணையத்தில் இதுபோன்ற மோசமான கருத்துகள் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும் எனப் பதிவிட்டுள்ளனர். நமது நேர்மையை மற்றவர்களுக்கு நிரூபிக்கத் தேவையில்லை எனப் பதிவிட்டிருந்தார்.
அதேநேரம் இன்னொரு நபர் தனக்கு நேர்ந்த அனுபவத்தைப் பதிவிட்டுள்ளார். அவர், "நான் ஒருபோதும் H1B மேனேஜரிடம் வேலை செய்ய மாட்டேன். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்க மாட்டார்கள்.. அவர்கள் தங்கள் வேலையைப் பாதுகாக்க உங்களைச் சிக்கலில் மாட்டிவிடுவார்கள். நீங்கள் நல்லவராக இருக்கலாம், ஆனால் என்னால் அனைவரும் நல்லவர்கள் எனக் கருத முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications