Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6,6,6,4,6,6- ஒரே ஓவரில் 34 ரன்கள் குவித்த பாரிஸ்டோ.. SA 20 தொடரில் 14.2 ஓவரில் 177 ரன்களை எட்டிய சன்ரைசர்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்சூரியன்: SA20 கிரிக்கெட் போட்டியில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது அதிகபட்ச ரன் சேசிங் சாதனையை பதிவு செய்தது. 177 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி வெறும் 14.2 ஓவரில் எட்டி சன்ரைசர்ஸ் அணி போனஸ் புள்ளிகளையும் பெற்றது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குவின்டன் டி காக் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரின் அரை சதங்கள் விளாசி அசத்தினர். இதன் மூலம் டிரைஸ்டன் ஸ்டப்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி 17 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.


Sunrisers Eastern cape

குவின்டன் டி காக் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் குவித்தார். டி காக், பவர்பிளேயில் லுங்கி என்கிடி மற்றும் லிசாட் வில்லியம்ஸ் பந்துவீச்சில் சிக்சர்களை விளாசி அதிரடி காட்டினார். ஆரம்பத்தில் டி காக்கின் ஆட்டத்தை ரசித்த ஜானி பேர்ஸ்டோவ், பின்னர் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகாராஜ் வந்தவுடன் தனது அதிரடியைத் தொடங்கினார்.

ஆஷஸ் 5வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய வீரர் டிராவிட் ஹெட் அபார சதம்.. 24 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை சமன்

12வது ஓவரில் ஐந்து சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 34 ரன்களை அதிரடியாகக் குவித்து, SA20 வரலாற்றில் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். பாரிஸ்டோ 44 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் சேர்த்தார். சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 177 ரன்கள் இலக்கை வெறும் 14.2 ஓவர்களில்,வென்று அசத்தியது.

இந்த போட்டியில், சன்ரைசர்ஸ் அணி கட்டுக்கோப்பான பந்துவீச்சு மற்றும் கச்சிதமான பீல்டிங் மூலம் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியை 176 ரன்கள் என்ற ஸ்கோருக்குள் கட்டுப்படுத்தியது. கேப்பிடல்ஸ் அணியின் கானர் எஸ்டர்ஹூய்சன் 33 பந்துகளில் 52 ரன்களும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 22 பந்துகளில் 47 ரன்களும் எடுத்தனர்.

சன்ரைசர்ஸ் தரப்பில், அன்ரிச் நோர்டிஜ் 150 கி.மீ/மணி வேகத்திற்கும் மேலான பந்துகளை வீசி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லூயிஸ் கிரிகோரி 18 ரன்களுக்கு 1 விக்கெட்டும், ஆடம் மில்ன் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதில் கேப்பிடல்ஸ் அணியின் புதிய வீரரான ஆண்ட்ரே ரஸ்ஸலின் முக்கிய விக்கெட்டும் அடங்கும்.

24 பந்தில் 10 சிக்சர்கள் விளாசிய 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி.. SA U19 அணியை சூப்பு வைத்த இந்தியா

இறுதியாக, குவின்டன் டி காக், கானர் எஸ்டர்ஹூய்சன், அன்ரிச் நோர்டிஜ் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோர் ஆட்ட நாயகன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதில், டி காக் 91.2% ரசிகர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

Credit: Mykhel

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+