Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bigg Boss: பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த அசம்பாவிதம்! திடீரென வெளியேற்றப்பட்ட கெமி, காரணம் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பம் முதலே சண்டை, சச்சரவுகள் மற்றும் தொடர் ட்ரோல்களால் நிரம்பி வழிந்து வருகிறது. மக்கள் பொழுதுபோக்கிற்காக பார்த்த நிகழ்ச்சி, இப்போது போட்டியாளர்களின் அநியாய சண்டைகளால் மக்களின் மன அமைதியை கெடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் சுவாரசியம் குறைந்து சலிப்படைய செய்தாலும், மற்றொரு பக்கம் சண்டைகளின் அனல் அதிகமாகி, நிகழ்ச்சி வேறு விதத்தில் சூடு பிடித்திருக்கிறது!

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

அதிகார போட்டியில் பார்வதியும், திவாகரும்

பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்கள், "என்ன செய்தாலும் நாங்கள் இப்படித்தான் இருப்போம்" என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. பார்வதி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அமைதியாக இருந்துவிட்டு, அதன்பிறகு தன் வேலையைக் காண்பித்து வரகிறார். முதலில் கன்டன்ட் கொடுப்பதற்காக இப்பட செய்து வந்தார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிலேயே தான் பெரிய ஆளாகத் தெரிய வேண்டும் என்பதற்காக இப்படி செய்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திவாகரின் தற்பெருமை

அதுமட்டுமல்லாமல், திவாகரும் "என்ன நடந்தாலும் நான் என் பெருமையைத்தான் பேசுவேன்" என தற்பெருமை பேசிக் கொண்டு சுற்றுகிறார். 'ஹோட்டல் டாஸ்கில்' சாண்ட்ரா தன் உழைப்பை எல்லாம் கொட்டி வேலை செய்தால், வியானாவும் திவாகரும் அதைத் தான் செய்ததாக பெருமை தேட முயற்சிக்கின்றனர். "பார்வதி - திவாகர் எல்லாரையும் இன்னும் ஏன் வீட்டில் வைத்திருக்கிறீர்கள், வெளியே அனுப்புங்கள்" என்றக் கருத்துகளும் மேலோங்கி வருகிறது.

போட்டியாளர்களின் பிடிவாதம்

போட்டியாளர்கள் குழுவாகச் சேர்ந்து விளையாட மறுத்து, தான் மட்டும் வெளியில் தெரிய வேண்டும் என்று நினைப்பதால், பார்வையாளர்கள் கடுப்படைந்துள்ளனர். இவர்களை வைத்து கொண்டு என்னதான் செய்வது என்றுப் பிக் பாஸிற்கே தெரியவில்லை. ஹோட்டல் டாஸ்கில் விருந்தாளிகளாக வந்த தீபக், பிரியங்கா, மஞ்சரி ஆகியோர், "நீங்க ஏன் இப்படி இருக்கீங்க?" என்று தங்களது ஆதங்கத்தைக் கொட்டினார்கள்.

தீபக்கின் அழுகை

ஒரு கட்டத்தில், உள்ளே நடக்கும் சண்டைகள் மற்றும் அநாகரீக நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட விருந்தினரான தீபக் கண்ணீர் விட்டு அழவே செய்துவிட்டார். இப்படி என்ன செய்தாலும், "நாங்கள் இப்படித்தான் இருப்போம்" என்ற மனநிலைக்கு போட்டியாளர்கள் உள்ளனர். இந்த குழப்பமான சூழலில், பிக் பாஸ் போட்டியாளரான கெமி, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சரும பிரச்சனை

ஈரப்பதம் காரணமாகத் தோல் உரிந்து வந்ததால், போட்டியாளர் கெமி, மருத்துவச் சிகிச்சைக்காக வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 9 நிகழ்ச்சி, போட்டியாளர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டதாகக் கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், இந்த மருத்துவ அவசரமும், மன ரீதியானப் பிரச்சனைகளும் நிகழ்ச்சியின் தரத்தை மேலும் சீர்குலைப்பதாக உள்ளது. அடுத்து என்ன நடக்குமோ என்று ரசிகர்கள் தங்களின் மன அமைதியைக் கெடுத்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+