Bigg Boss: பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த அசம்பாவிதம்! எல்லா பக்கமும் ஒரே அழுகை! எந்த சீசனிலும் இப்படி இல்லையே?
சென்னை: தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, ஆரம்பம் முதலே சண்டை, சச்சரவுகள் மற்றும் தொடர் அழுகை காட்சிகளால் நிரம்பி வழிந்து வருகிறது. வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்ததில் இருந்து, உள்ளிருக்கும் போட்டியாளர்களின் 'டிரிக்கர்' இன்னும் அதிகரித்து, நிகழ்ச்சியில் சுவாரசியத்தை கூட்டுவதற்கு பதிலாக பெரும் குழப்பத்தையும், கலவரத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

அழுகை காட்சிகளும், கலவரங்களும்
ஆரம்பத்தில் சண்டைகளாக இருந்த நிகழ்ச்சி, இப்போது அழுகை காட்சிகளாக மாறியுள்ளது. புதிதாக வந்த வைல்டு கார்ட் போட்டியாளர்களும் சுவாரசியத்தைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், அவர்களும் சண்டைக்குத் தயாராகவே இருக்கின்றனர். இது போதாதென்று, இந்த முறை மூன்று பேரை ஹெஸ்ட்டாக, அதாவது விஐபிக்களாகப் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பியிருந்தனர். அவர்களில் பிரியங்கா, தீபக் மற்றும் மஞ்சரி ஆகியோரும் அடக்கம். பிக் பாஸ் வீட்டில் பிரபலமான இவர்களைப் பார்த்தால், விளையாட்டு மாறும் என்று பிக் பாஸ் எதிர்பார்த்திருந்தார்.
பிக் பாஸ் கதறல்
ஆனால், உள்ளே போன மூன்று விஐபிக்களும், உள்ளே நடந்த கலவரங்களைப் பார்த்து தாங்க முடியாமல் கதறிவிட்டனர். ஒரு கட்டத்தில், உள்ளே நடந்த கலவரங்களைக் கண்டு பிக் பாஸ் அவர்களிடமே மன்னிப்புக் கேட்டிருக்கிறார். "உங்களை தெரியாமல் உள்ளே வரவைத்துவிட்டேன். உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதற்கு மேலும் இந்த நிகழ்ச்சியில் நீங்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் இருக்கலாம். இல்லை என்றால் வெளியே வரவேண்டும் என்றாலும் வந்துவிடலாம்" என்று மனம் உருகி பேசியது, பார்வையாளர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
போட்டியாளர்களின் கண்ணீர்
பிக் பாஸின் இந்தக் கலங்கிய பேச்சைக் கேட்டு, உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் உடைந்தனர். தீபக் இந்த நிகழ்ச்சி மூலமாக நன்றாகவே பிரபலமானார். அவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. ஆனால், பிக் பாஸ் இப்படி மனமுடைந்து பேசியதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அவர் ஒரு பக்கம் அழுது கொண்டிருந்தார்.
பிரஜன்
அடுத்ததாக, பிரஜன் அழுது கொண்டிருக்கிறார். அவர் எதற்காக அழுகிறார் என்றே தெரியவில்லை. அதுபோல, இப்போது வெளியானப் புரமோவில் விக்கல்ஸ விக்ரமும் அழுது கொண்டிருக்கிறார். அவர், "என்னால மேனேஜர் பதவியில் தொடர்ந்து பணியாற்ற முடியாது. நான் காமெடி மேன். என்னுடைய பிராண்ட் வேற. ஆனா, நீங்க என்னை இவ்வளவு மனமுடைய வெச்சிட்டீங்க" என்று வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்.
பிரியங்காவின் நேரடி குற்றச்சாட்டு
பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் கலவரங்களை பற்றி பிரியங்கா நேரடியாகவே சொல்லிவிட்டார். "இதற்கு முந்தைய சீசன்களில் இதுபோல எந்த இடத்திலும் நடக்கவில்லை. சில இடங்களில் சண்டை வந்தாலும், இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. ஆனால், இந்த சீசனில் தான் இவ்வளவு மோசமாக இருக்கிறது. எதற்காக சண்டை போடுகிறீர்கள் என்றே தெரியவில்லை" என்று பிரியங்கா விமர்சித்துள்ளார்.
டாஸ்க்கில் அலட்சியம்
தற்போது கொடுத்த டாஸ்க்கையும் சரியாகச் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். "ஒருவரிடம் நாங்கள் தண்ணீர் கேட்டால், அங்கே இருக்கும் அதற்குப் பொறுப்பானவர் தான் தர வேண்டும். ஆனால், இன்னொருவர் ஸ்கோர் செய்ய வேண்டும் என்று நினைத்து, உள்ளே இருப்பவரை டொமினேட் செய்து, அவரை மட்டம் தட்டுகிறீர்கள், அவருடன் சண்டை போடுகிறீர்கள். இது பார்ப்பதற்கே நல்லா இல்லை" என்று பிரியங்கா கடுமையாகப் பேசியிருக்கிறார்.
இத்தனை பிரச்சனைகளுக்கு பிறகும், உள்ளே இருப்பவர்கள் விளையாட்டை மாற்றுவது போலத் தெரியவில்லை. மொத்தத்தில், இந்தச் சீசன் பார்வையாளர்களுக்குப் பொழுதுபோக்குக் கொடுப்பதற்கு பதிலாக, கண்ணீரையும், குழப்பத்தையும், அநாகரீகச் சண்டைகளையும்தான் பரிசாக அளித்துள்ளது போலத் தெரிகிறது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications