Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

60 வயதில் தங்க பதக்கம் வென்ற பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர்! தமிழ்நாட்டுக்கே பெருமை, குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான முகம் நடிகர் அஜய் ரத்னம். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் "முத்து வேல்" என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அமைதியான நடிப்பு, உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் வெளிப்படும் இயல்பான எமோஷன் ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார் அஜய் ரத்னம்.

ஆனால், திரையில் மட்டுமல்ல... விளையாட்டு அரங்கிலும் இவர் உண்மையான ஹீரோவாக மாறியிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற 34வது தேசிய பஞ்ச் பென்ச் வெயிட் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், 60 வயதான அஜய் ரத்னம் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றி, வயது என்பது சாதனைக்கு தடையல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

Pandian Stores serial vijay tv

இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு அவர் பேசிய போது, "60 வயதிலும் இந்த வெற்றியை பெற முடிந்ததற்கு காரணம், தொடர்ந்து கடைப்பிடிக்கும் ஒழுங்கான பயிற்சியும் உடல்நலம் பராமரிப்புமே," என்று கூறியிருந்தார்.

முன்னமே சாதனை புரிந்தவர்

இது அஜய் ரத்னத்துக்கு முதல் சாதனை அல்ல. இதற்கு முன்பே, தமிழ்நாடு அளவிலான பவர்லிப்ட்டிங் பென்ச் போட்டிகளில் அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தொடர்ந்து உடற்பயிற்சியை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டதே இந்த வெற்றிகளுக்கு அடிப்படை காரணமாக பார்க்கப்படுகிறது.

நடிப்பு பயணம்

அஜய் ரத்னம் சின்னத்திரை மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பழமொழிகளிலும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் ஒரு சில நடிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு உயரமாக இருப்பார்கள் அந்த வரிசையில் ஒருவர் தான் இவரும்.

Pandian Stores serial vijay tv

அதிலும் குறிப்பாக நாளைய மனிதன், இந்தியன், போக்கிரி, நண்பன் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. நடிகராக மட்டுமல்லாமல் ஒரு மோட்டிவேஷன் ட்ரெயினராகவும் இருக்கிறார். அதனால் தன்னுடைய உடல்நலத்திலும் அக்கறை கொண்டிருக்கிறார். இப்போது இவர் தங்கம் வென்றதற்கு சோசியல் மீடியாவில் பல பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களின் பாராட்டு

சோசியல் மீடியாவில், "60 வயதில் இப்படியொரு சாதனை... உண்மையான இன்ஸ்பிரேஷன்", "திரையில் நல்ல மனிதன், வாழ்க்கையிலும் போராளி", "இவர்தான் ரியல் ஹீரோ" என்று ரசிகர்கள் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+