For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதார வளர்ச்சியில் பெரும் சரிவு!

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த நிதியாண்டில் (2012-13) 5 சதவீதமாகவே இருக்கும் என்று குண்டைப் போட்டுள்ளது மத்திய அரசு.

2006-07ம் ஆண்டில் 9.6 சதவீத வளர்ச்சியை இந்தியா எட்டிய நிலையில், விரைவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சியில் நாடு காலடி எடுத்து வைக்கப் போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், 2008ம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கமும், 2010ம் ஆண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவும் இந்தியாவின் வளர்ச்சியையும் படுவேகத்தில் கீழே தள்ளிவிட்டன.

Economic Growth

இந் நிலையில் இந்த ஆண்டு 5.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஆனால், 5 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி இருக்காது என்று மத்திய புள்ளி விவரத்துறை இன்று அறிவித்துவிட்டது.

தொழில்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை ஆகியவற்றின் மோசமான நிலைமைகளைப் பார்க்கும்போது 5 சதவீத வளர்ச்சியை இந்தியா தொடாது என்று புள்ளி விவரத்துறை கூறியுள்ளது.

கடந்த ஆண்டு இது 6.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2002-03ம் ஆண்டில் தான் இந்தியாவின் வளர்ச்சி வெறும் 4 சதவீதமாக இருந்தது. இதையடுத்து விறுவிறுவென மேலே ஏறி 9.6 சதவீதத்தைத் தொட்டது. இதையடுத்து சரிவு ஆரம்பமாகியது. இந் நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான அளவாக இந்த ஆண்டு வெறும் 5 சதவீத வளர்ச்சியையே இந்தியா அடையவுள்ளது.

குறிப்பாக விவசாயத்துறையின் வளர்ச்சி 1.8 சதவீதமே இருக்குமாம். இது கடந்த ஆண்டு 3.6 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அது பாதியாக குறையவுள்ளது.

அதே போல உற்பத்தித்துறை எனப்படும் தொழில்துறையின் வளர்ச்சியும் 1.9 சதவீதத்துக்கும் கீழே தான் இருக்கும் என்கிறது புள்ளி விவரத்துறை. இது கடந்த ஆண்டு 2.7 சதவீதமாக இருந்தது.

சேவைத்துறை எனப்படும் வங்கித்துறை, இன்சூரன்ஸ், தொலைத் தொடர்புத்துறை, ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி இந்த ஆண்டு 8.6 சதவீதமாக இருக்குமாம். இது கடந்த ஆண்டு 11.7 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும் என்று சொல்லிவிட்டு இப்போது ஜனாதிபதியாகிவிட்டார் அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. ஆனால், இது 5.7 முதல் 5.9 சதவீதமாகவே இருக்கும் என்றார் புதிய நிதியமைச்சரான ப.சிதம்பரம்.

இப்போது அது கூட இருக்காது போலிருக்கிறது. 5 சதவீத வளர்ச்சியை எட்டினால் அதுவே பெரிய சாதனையாக இருக்கும் போலத் தெரிகிறது.

இது என்ன பெரிய விஷயமா.. 1 சதவீதம், 2 சதவீதம் குறைஞ்சா என்று கேட்பவர்களா நீங்கள்..

0.1 சதவீத வளர்ச்சி என்பது பல்லாயிரம் கோடி முதலீடுகளையும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உள்ளடக்கியது. இதில் 1 சதவீதம் சரிவு என்றால் நிலைமை என்னவாகும் என்று யூகித்துக் கொள்ளலாம்.

நாடாளுமன்றத்தில் இந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்த நியூஸ் வந்து சேர்ந்துள்ளது.

English summary
India's economic growth rate this fiscal is estimated to be sharply lower at 5%, lowest in a decade, on account of poor performance of manufacturing, agriculture and services sector. This estimate by CSO is drastically lower than what has been projected thus far by the government and RBI. "The growth in GDP (Gross Domestic Product) during 2012-13 is estimated at 5% as compared to a growth rate of 6.2% in 2011-12," according to the Advanced Estimates released today by the Central Statistical Organisation (CSO).
 In 2002-03, the GDP had grown at 4%. Since then the Indian economy has been expanding at over 6%, the highest rate being 9.6% in 2006-07. The advance GDP estimates are released by the CSO before the end of a financial year to enable the government to formulate various estimates for inclusion in the Budget
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X