Federal Bank: ஃபெடரல் வங்கியில் வேலை பார்க்க ஆசையா? டிகிரி முடித்திருந்தால் போதும்.. செம சான்ஸ்! விட்றாதீங்க
சென்னை: ஃபெடரல் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடாகவில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் 18 ஆயிரம் வழங்கப்படும்.
நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்று பெடரல் வங்கி. கடந்த 1931 ஆம் ஆண்டு கேரளாவில் தொடங்கப்பட்ட இந்த வங்கி, தற்போது நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வருகிறது. தற்போது இந்த வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஃபெடரல் வங்கியில் வேலை
ஃபெடரல் வங்கி, அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது ஓராண்டு கால அப்ரென்டிஸ் பயிற்சிப் பணியாகும். வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியை பொறுத்தவரை ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு நேர பட்டப்படிப்பை முடித்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் ஆகும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.18,000/- உதவித்தொகையாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
01.03.2026 அன்று விண்ணப்பதாரரின் வயது 28-ஐ கடந்திருக்கக் கூடாது (அதாவது, 01/03/1998 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்).
தேர்வு முறை:
தேர்வு முறையை பொறுத்தவரை ஷார்ட் லிசனிங் (shortlisting), நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வு நடைபெறுவதற்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன்னதாக, தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், முதலில் இந்திய அரசின் 'அப்ரென்டிஸ்ஷிப் போர்ட்டல்' (NATS Portal) ஆன https://nats.education.gov.in என்ற இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்ய வேண்டும். பதிவு எண் கிடைத்ததும், அதே போர்ட்டலில் உள்நுழைந்து, ஃபெடரல் வங்கியின் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மார்ச் 10, 2026 முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 17, 2026 ஆகும். மேலும் விவரங்களை அறிய https://www.federal.bank.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.












Click it and Unblock the Notifications