For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசு அரணாக இருந்து விவசாயிகளை காத்து வருகிறது... கூசாமல் பேசும் அமைச்சர் துரைக்கண்ணு

தமிழக அரசு அரணாக இருந்து விவசாயிகளை காத்து வருவதாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக அரசு அரணாக இருந்து விவசாயிகளை காத்து வருவதாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். விவாசாயிகள் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டம் இன்று 15வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை மற்றும் தமிழக வேளாண்துறை அமைச்சர் துறைக்கண்ணு ஆகியோர் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை இன்று சந்தித்தனர்.

Tamilnadu Agricultural minister Duraikannu meets Tamil Framers in Delhi today

இதைத்தொடர்ந்து தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

தமிழக அரசு விவசாயிகளை அரணாக இருந்து காத்து வருவதாகவும் அவர் கூசாமால் கூறினார். மேலும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

English summary
Tamilnadu Agricultural minister Duraikkannu meets Tamil Framers in Delhi today. He said Tamilnadu govt working as a security guard for the farmers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X