இந்தியாவுக்குப் போட்டியாக வடகிழக்கில் ராணுவத்தினருக்கு வீடு கட்டும் சீனா-இலங்கை அனுமதி
கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய அரசாங்கம் சார்பில் மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் அதே வடக்கு மற்றும் கிழக்கில் சீனாவையும் இலங்கை களமிறக்கியுள்ளது.
சீனப் பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு அடுத்த வாரம் கொழும்பு வருகிறது. இக்குழுவினர் இலங்கை ராணுவத்துக்கு பெருமளவு உதவிகளை வழங்க இருக்கிறது. குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கில் ராணுவத்தினருக்கு வீடுகளைக் கட்டித்தரவும் முகாம்களை சீரமைத்துத் தரவும் சீனாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் வடகிழக்கில் ரயில்சேவை, வீடமைப்பு திட்டம் போன்ற மறுவாழ்வுப் பணிகளை இந்தியா மேற்கொண்டிருக்கிறது. தமிழருக்கு இந்தியா உதவும் நிலையில் ராணுவத்தினருக்கு சீனா உதவ இலங்கை அனுமதி கொடுத்திருக்கிறது.
எத்தனையோ முறை இலங்கை தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சர்கள் சீனாவுக்கு சென்றபோதும் இதுவரை எந்த ஒரு சீன பாதுகாப்பு அமைச்சரும் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டது இல்லை. தற்போதுதான் முதல் முறையாக சீனாவி பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார் என்பதை அரசியல் பார்வையாளர்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதுகின்றனர்.
இந்த பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழு சீனா திரும்பிய பின்னர் வடக்கு கிழக்கில் தொழில்முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிய 100 பேர் மிகப் பெரிய குழுவை இலங்கை அழைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications