உயர் ரக வாழைப்பழ தார் விலை கடும் சரிவு - விவசாயிகள் கவலை
நெல்லை: நெல்லையில் உயர்ரக ஏத்தன் ரக வாழைத்தாரின் விலை கிலோ ரூ.18 ஆக விற்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் விகேபுரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், காருகுறிஞ்சி, குனியூர், சேரன்மகாதேவி, முக்கூடல், சங்கரன்திரடு, பத்தமடை உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன.

சேரன்மகாதேவி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. 12 மாத பயிரான இவை குலை தள்ளி காய்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக சுமார் 10 மாதங்கள் வரை கஷ்டப்பட வேண்டியது இருக்கும். அதன்பிறகு அறுவடை செய்து கை கொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த விவசாயிகள் தற்போது கவலையில் மூழ்கியுள்ளனர்.
தை முதல் வாரம் ஏத்தன் ரக வாழைக்காய் ரூ.38க்கு விலை போனது. தற்போது சரி பாதி விலை வீழ்ச்சியடைந்து ரூ.18க்கு விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு பலத்த அடி விழுந்துள்ளது.
ஒரு தார் ரூ.250 முதல் ரூ.300 வரை விலை போன நிலை மாறி ரூ.110 முதல் ரூ.140 வரையே விற்பனையாகிறது. இதற்கு வியாபாரிகள், புரோக்கர்கள் கூட்டணியே காரணம் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நெல்லையில் கொள்முதல் செய்யப்படும் வாழைதார்கள் கேரளாவில் கொள்ளை லாபத்தில் விற்கப்படுவதாகவும், இதன் மூலம் வியாபாரிகளும், புரோக்கர்களும் அதிக பணம் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications