பெட்ரோல் - டீசல் விலைக் குறைப்பு.. நல்லா குறைச்சாங்க போங்க!
டெல்லி: புதன்கிழமை நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.30-ம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த குறைப்பின்படி, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.59.20-க்கும், டீசலின் விலை ரூ.47.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 67 காசுகள் குறைந்து, ரூ.66.81-க்கும், டீசலின் விலை ரூ.1.15 சரிந்து ரூ.52.08-க்கும் விற்கப்படுகிறது.
மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 84 காசுகள் குறைந்து ரூ.66.69-க்கும், டீசலின் விலை ரூ.1.43 சரிந்து ரூ.54.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 85 காசுகள் குறைந்து, ரூ.61.90-க்கு விற்கப்படுகிறது. இதேபோல், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.1.40 சரிந்து ரூ.50.21-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோலின் விலை கடந்த 2ஆம் தேதியன்று, லிட்டருக்கு 49 காசுகளும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.1.21-ம் குறைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசலின் விலை ஒரே மாதத்தில் 2ஆவது முறையாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதற்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல் - டீசலின் விலை குறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் சர்வதேச சந்தையில் இப்போதுள்ள நிலவரப்படி, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு மேலும் 10 ரூபாயைக் குறைத்தாலும் லாபத்தில் விற்பனை செய்ய முடியும். அதே போல மாநில அரசுகள் வரிகளை லிட்டருக்கு ரூ 3 வரை குறைக்க முடியும். ஆனால் அதைச் செய்ய மனமின்றி, ஒப்புக்கு சில பைசாக்கள் குறைப்பதும், கூட்டுவதுமாக கண்ணாமூச்சு ஆடிக் கொண்டிருக்கின்றன.
-
பூமிக்கு அடியில் ஒளிந்திருக்கும் பொக்கிஷம்.. இந்தியாவை மாற்றப்போகும்.. மோடியின் மெகா திட்டம் -
மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. உங்களின் 1 வருட பட்ஜெட்டையே காலி செய்யும்.. எப்படி தெரியுமா? -
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
ஜூன் துவங்கியதும் அதிர்ச்சி.. இக்கட்டான கட்டத்தில் ஆர்பிஐ.. மக்களே உஷார்! -
திணறும் மத்திய அரசு! 1 மணிநேரத்திற்கு ரூ.25 கோடி இழப்பு.. பெட்ரோல், டீசல் விலையை 4 முறை உயர்த்தியும் இப்படி! -
கற்பனைக்கு எட்டாத உச்சத்தில் விலைகள் உயர்வு.. நிர்மலா சீதாராமன் சொன்ன மேஜர் விஷயம் -
இனி நிறுத்த முடியாது.. தக்காளி, வெங்காயம், காய்கறி விலை உயர போகுது.. இடியை இறக்கும் அறிவிப்பு! -
பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி.. எல்லாமே அடுத்தடுத்து உயருகிறதே.. இனி கட்டுப்படுத்தவே முடியாது! -
“ரூ.10 எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டியிருக்கும்..” பெட்ரோல் விலை குறித்து வாயை விட்ட நிர்மலா சீதாராமன் -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம்












Click it and Unblock the Notifications