பெட்ரோல் விலை 96 காசு, டீசல் விலை 91 காசு குறைப்பு
டெல்லி: 3 மாதத்தில் 7வது முறையாக பெட்ரோல் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 96 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல டீசல் விலையும் 91 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை கடந்த 2 மாதத்தில் 3வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை மாற்றம் அமலுக்கு வந்தது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 67.01 ரூபாயாக இருந்தது. இது, தற்போது 66.05 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல், 56.84 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, 91 காசுகள் குறைக்கப்பட்டு, 55.93 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் முதல் தற்போது வரை, பெட்ரோல் விலை, 7 முறை குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 18ம் தேதி, டீசல் மீதான விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டு அதன் விலை, லிட்டருக்கு 3.37 ரூபாய் குறைக்கப்பட்டது. நவம்பர் 1ம் தேதி, மீண்டும் டீசல் விலை லிட்டருக்கு, 2.25 ரூபாய் குறைக்கப்பட்டது.
தற்போது, 3வது முறையாக, டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த நவம்பர் 13ம் தேதி மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு, 1.50 ரூபாய் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
-
பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வு.. சென்னையில் இன்று புதிய உச்சம் தொட்டது.. எவ்வளவு? -
கற்பனைக்கு எட்டாத உச்சத்தில் விலைகள் உயர்வு.. நிர்மலா சீதாராமன் சொன்ன மேஜர் விஷயம் -
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. உங்களின் 1 வருட பட்ஜெட்டையே காலி செய்யும்.. எப்படி தெரியுமா? -
திணறும் மத்திய அரசு! 1 மணிநேரத்திற்கு ரூ.25 கோடி இழப்பு.. பெட்ரோல், டீசல் விலையை 4 முறை உயர்த்தியும் இப்படி! -
நாடு முழுவதும் அதிரடியாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. பொதுமக்களுக்கு மீண்டும் ஒரு பேரதிர்ச்சி -
“ரூ.10 எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டியிருக்கும்..” பெட்ரோல் விலை குறித்து வாயை விட்ட நிர்மலா சீதாராமன் -
இனி நிறுத்த முடியாது.. தக்காளி, வெங்காயம், காய்கறி விலை உயர போகுது.. இடியை இறக்கும் அறிவிப்பு! -
பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி.. எல்லாமே அடுத்தடுத்து உயருகிறதே.. இனி கட்டுப்படுத்தவே முடியாது! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications