'சஹாரா' சுப்ரதா ராய்க்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டு 31ந் தேதி, முதலீட்டாளர்களிடம் முறைகேடாக வசூலித்த பணத்தை திருப்பித்தராத சஹாரா நிறுவனத்தின் சொத்துக்களை செபி பறிமுதல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நீடித்து வந்தது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவையுமே சஹாரா நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. இதனால் அண்மையில் சொத்துக்களை செபி விற்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட, சஹாரா நிறுவனத் தலைவர் மற்றும் மூன்று இயக்குனர்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது.
ஏற்கெனவே நவம்பர் மாதம் 21ந் தேதி சஹாரா நிறுவனத் தலைவர் ராய் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்து இருந்தது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுப்ரதா ராய் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த உச்சநீதிமன்றம், மார்ச் 4-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டது. இதனால் சுப்ரதா ராய் எந்நேரமும் கைது செய்யப்படலாம்.
-
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை.. விஜய்க்கு பெரிய சவால் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications