ராகுல் காந்தி மீது பாய்ந்த வழக்கு.. வாயை விட்டு வம்பில் சிக்கிய காங்கிரஸ் தலைவர்.. என்ன நடந்தது?
புவனேஸ்வர்: ‛பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமில்லை.. இந்தியாவுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது'' என்று பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது ஒடிசா போலீசார் 2 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ராகுல் காந்தி. தற்போது நாடாளுமன்றத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ராகுல் காந்தி தனது உரையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

நாடாளுமன்றம் மற்றும் பிரசார பொதுமேடை உள்பட கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி விளாசி வருகிறார். இதற்கிடையே தான் கடந்த 15ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். விழாவில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛நம் சித்தாந்தம் என்பது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் போல் ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்டது. தொடர்ந்து ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்த்து சண்டையிட்டு வருகிறோம். இந்த சண்டையை சரியான முறையில் செய்கிறோம் என்று நான் நினைக்கவில்லை.
பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிராக சண்டையிடுவதாக நீங்கள் நினைத்தால் உங்களுக்கு சரியான புரிதல் என்பது இல்லை. பாஜக, ஆர்எஸ்எஸ் நம் நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றி உள்ளது. இப்போது நாம் (காங்கிரஸ்) பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்'' என்றார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டில் இருந்து கொண்டே இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம் என்று உள்நோக்கத்துடன் ராகுல் காந்தி பேசியுள்ளதாக கூறி பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். ராகுலின் இந்த பேச்சை கண்டித்து ராமா ஹரி புஜாரி என்பவர் ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரை தொடர்ந்து ராகுல் காந்தி மீது 2 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி பிஎன்எஸ் சட்டப்பிரிவு 152 (இந்திய இறையாண்மை, ஒற்றுமைக்கு எதிராக பேசுதல்), பிஎன்எஸ் சட்டப்பிரிவு 197 (1) (d)(தவறான கருத்துகள் மூலம் இந்திய இறையாண்மை, ஒற்றுமைக்கு மிரட்டல் விடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் ராகுல் காந்தி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி பிஎன்எஸ் சட்டப்பிரிவு 158 (இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை விளைவித்தல்), 191 (1) (தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்படுதல்) என்று 2 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது ராகுல் காந்திக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல் காந்தி மீது ஏற்கனவே இதுதொடர்பான புகாரில் அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். தற்போது ஒடிசா போலீசார் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
"கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்".. திமுகவுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி! -
“தேர்தல் படுதோல்விக்கு பிறகு கூட.. திமுக பாடம் கற்கவில்லை!” காங். அமைச்சர் ராஜேஷ்குமார் சாடல்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
காங்கிரஸ் உண்டு கொழிக்கும் ஒட்டுண்ணி! பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்! வெளுத்த திமுக -
“மாணிக்கம் தாகூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்”.. விளாசிய திமுக! -
காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன் - அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த சபதம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு












Click it and Unblock the Notifications