ஜார்க்கண்ட்டில் பாஜகவுக்கு அதிர்ச்சி! ஆட்சியை தக்கவைக்கும் ஜேஎம்எம்- காங்.! P Marq எக்ஸிட் போல்
ராஞ்சி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையே பி மார்க் (P Marq ) நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அங்கு கடும் போட்டியைத் தாண்டி ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்க வாய்ப்புகள் அதிகம் என P Marq எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.
இந்தி பேசும் மாநிலங்களில் முக்கியமானதான ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அங்கு இப்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது.. எதிர்க்கட்சி வரிசையில் பாஜக உள்ளது..

பாஜகவுக்கு இந்தி மாநிலங்களில் தான் எப்போதும் பலமானதாக இருக்கும். இந்த முறை எப்படியாவது அங்கு வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. அதேநேரம் கடந்த முறை பெற்ற வெற்றியை எப்படியாவது தக்கவைக்க வேண்டும் என்பதில் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது.
அங்கு மொத்தம் 81 தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த நவ. 13ம் தேதி 43 தொகுதிகளிலும், இன்று 38 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் முடிவுகளுடன் அங்கு வரும் நவ. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இப்போது எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அதன்படி பி மார்க் (P Marq) ஜார்கண்டில் நடத்திய எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அங்கு மொத்தம் 81 சீட்கள் இருக்கும் நிலையில், பாஜகவின் என்டிஏ கூட்டணி 31- 40 இடங்களில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மறுபுறம் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி 37-47 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
அங்கு கடும் போட்டியைத் தாண்டி ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கும் என்பதே P Marq கருத்துக்கணிப்பு முடிவாகும். அங்கு எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் களமிறங்கும் பாஜகவால் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றே P Marq எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications