டெல்லி ரிசல்ட்டால் கூட்டணி கணக்கை மாற்றிய மம்தா பானர்ஜி.. “நாம் மட்டுமே போதும்”.. க்ளீயர் மெசேஜ்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாக பிடிஐ, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதற்கு சவாலாக உள்ளது. 2019, 2024 லோக்சபா தேர்தலில், அங்கு பாஜக, அதிக தொகுதிகளில் வென்றது. 2021 சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் 121 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது.

இந்நிலையில், டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்து உள்ளது. இதனை அக்கட்சி தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக தலைவர்கள், டெல்லியை பிடித்து விட்டதால், அடுத்த மேற்கு வங்கத்தையும் பிடிப்போம் எனக் கூறி வருகின்றனர்.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை மட்டுமே வென்று ஆட்சியைப் பறிகொடுத்துள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைக் கூடப் பிடிக்க முடியவில்லை. இது இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இதுதொடர்பாக பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசுகையில், "டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் உதவவில்லை. ஹரியானாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இதனால் 2 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று விட்டது.
எனவே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சி இல்லை. நான் தனித்தே போட்டியிடுவேன். நாம் மட்டுமே போதும். மாநிலத்தில் மூன்றில் 2 பங்கு மெஜாரிட்டியுடன் 4-வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும்.
தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் இருக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுக்கு இடையே புரிதல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேசிய அளவில் பா.ஜனதாவை கட்டுப்படுத்துவது இந்தியா கூட்டணிக்கு கடினமாக இருக்கும்" எனப் பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
-
அவங்கவங்க வேலையை பார்ப்போம்..திமுக - காங்கிரஸ் சண்டை நல்லதுக்கில்லை! திருநாவுக்கரசர் சீரியஸ் அட்வைஸ் -
இந்தியர்கள் 3 நாடுகளுக்கு செல்ல அதிரடி தடை.. அறிவித்த மத்திய அரசு.. பின்னணியில் ‘எபோலா' நோய்த்தொற்று -
"கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்".. திமுகவுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி! -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
காங்கிரஸ் உண்டு கொழிக்கும் ஒட்டுண்ணி! பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்! வெளுத்த திமுக -
தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள்! போட்ட கண்டிஷன் என்னாச்சு? காங்கிரஸுக்கு ஸ்ரீநிதி கேள்வி -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
“மாணிக்கம் தாகூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்”.. விளாசிய திமுக! -
காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன் - அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த சபதம்! -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர்












Click it and Unblock the Notifications