சிவன் கோயில் கருவறையில் அமர்ந்து மது அருந்தும் பூசாரி.. பரவும் வீடியோ.. பக்தர்கள் அதிர்ச்சி!
அமராவதி: ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் வேணுகோண்டா பகுதியில் 700 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் கருவறைக்குள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு கூல்ட்ரிங்ஸ் பாட்டிலில் பூசாரி ஒருவர் மது அருந்திக்கொண்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அந்த பூசாரி மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவில் கருவறைக்குள் அமந்து பூசாரி ஒருவர் மதுபானம் குடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், பூசாரி ஒருவர் சிவன் கோவில் கருவறைக்குள் அமர்ந்திருக்கிறார். அப்போது அவர் யாரிடமோ செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறார். கையில் ஒரு வாட்டர் கேனை வைத்துள்ளார். அதில் இருந்த மதுபானத்தை அருந்திக்கொண்டே அவர் செல்போன் பேசுகிறார்.

கோவில் கருவறைக்குள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அந்த பூசாரி, மதுபானம் குடிப்பது போல் வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை கோவில் வெளியே இருந்து யாரோ ஒருவர் செல்போனில் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து பக்தர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்தன. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கோவில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள சிவன் கோவில் என்பது தெரியவந்தது. ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் வேணுகொண்டா பகுதியில் 700 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் ஏரளாமானோர் வருகை தருவார்கள்.
கோவிலில் பூசாரியான பிரசாத் என்பவர் தான் இந்த கோவிலில் பூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரசாத் தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பூசாரி பிரசாத் தான் யாரிடமோ போனில் பேசிக்கொண்டு மதுபானம் அருந்தியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கண்டனங்கள், புகார்கள் அளிக்கப்பட்டன. இது தொடர்பாக அப்பகுதி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கோவில் கருவறைக்குள் அமர்ந்து பூசாரி ஒருவரே மது அருந்திய சம்பவம் ஒட்டுமொத்த சிவன் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், கோயில் கருவறைக்குள் அமர்ந்து மது அருந்தும் பூசாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
கருவறைக்குள் அமர்ந்து மது அருந்தும் பூசாரி, புனித தன்மையை கெடுத்துவிட்டதாகவும் அவரை உடனடியாக கைது செய்து, கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தண்டிக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் சிலர் ஆவேசமாக கூறி வருகிறார்கள். பக்தர்களின் மனது புண்படும் வகையில் இப்படி நடந்து கொள்வதை எந்த வகையில் நியாயம் எனவும் சில நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகிறார்கள்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications