ஊழியர்கள் அனைவருக்கும் Iphone 17 Pro Max பரிசாக வழங்கிய பாஸ்.. நீதாண்டா ஓணரு.. யாருங்க இவரு?
பெய்ஜிங்: சீனாவில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், இன்டர்ன்ஷிப் மாணவர்கள் என்று அனைவருக்கும் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 900 மதிப்புள்ள ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் செல்போனை பரிசாக வழங்கி இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளது. இதனால் ஊழியர்கள் இன்பஅதிர்ச்சியடைந்துள்ளனர்.
சீனாவில் MediaStorm என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனராக இருப்பவர் டிம் பான். இந்த நிறுவனம் ஒவ்வொரு பொருட்களின் ரிவ்யூ மற்றும் விலாக்கிங் சார்ந்த பணியை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனத்துக்கு பிரபலமான சீனாவின் சமூக வலைதளமான பிலிபிலி(Bilibili)-யில் 1 கோடியே 20 லட்சம் பாலோயர்ஸ் உள்ளனர். நிறுவனரான டிம்பான் தனது ஊழியர்களுக்கு அவ்வப்போது பரிசுகளை வழங்கி இன்பஅதிர்ச்சி கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தான் அவர் திடீரென்று தனது ஊழியர்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளார். ‛‛ஐபோன் 17 இப்போது மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. வழக்கம்போல் ஒவ்வொருவருக்கும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் தர உள்ளேன். வாருங்கள் வந்து உங்களுக்கு பிடித்த நிறத்தில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஐபோனை தேர்வு செய்து கொள்ளுங்கள். இது ஊழியர்களுக்கும், இன்டர்ன்ஷிப் செய்வோருக்கும் பொருந்தும்'' என்று அனுப்பி உள்ளார்.
இந்த மெசேஜை பார்த்த அனைத்து ஊழியர்களும் இன்பஅதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் அலுவலகத்துக்கு சென்று அங்கு இருந்த ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஐபோனை தங்களுக்கு பிடித்த நிறத்தில் தேர்வு செய்து எடுத்து கொண்டனர். இந்த ஐபோன்களுக்கான வரியை நிறுவனமே ஏற்பதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது வழங்கப்பட்டுள்ள ஐபோன் 17 ப்ரோ மேக்ஸின் விலை சீனாவில் ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 527 ஆகும். இதனை பெற்ற ஊழியர்கள் உலகிலேயே சிறந்த பாஸ் டின் பென் தான் என்று பாராட்டி வருகின்றனர்.
டிம் பென் இப்படி தனது ஊழியர்களுக்கு ஐபோன் வழங்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு 100 ஊழியர்களுக்கு ஐபோன் 16 ப்ரோ மற்றுமு் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 ஆகியவற்றை பரிசாக வழங்கினார். அப்போதும் அதற்கான வரியை அவரே ஏற்றுக்கொண்டார். இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு அறிமுகம் மீடியா ஸ்டோம் அலுவலக ஊழியர்களுக்கு கொண்டாட்டமாக மாறி வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்தில் ஐபோன் 17-யை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதில் மொத்தம் 4 வகைகள் உள்ளன. ஐபோன் 17, ஐபோன் ஏர், ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என்று 4 வகைகள் உள்ளன. இதன் விலையை எடுத்து கொண்டால் 256 ஜிபி ஸ்ட்ரோரேஜ் கொண்ட ஐபோன் 17 விலை ரூ.82,900 ஆகும். 512 ஜிபி ஸ்ட்ரோரேஜ் விலை ரூ.1,02,900 ஆகும். ஐபோன் ஏர் என்றால் 256 ஜிபி ஐபோன் ரூ.1,9,900க்கும், 512 ஜிபி ஐபோன் ரூ.1,39,900க்கும், 1டிபி என்றால் ரூ.1,59,900க்கும் விற்பனையாகிறது.
இதுதவிர ஐபோன் 17 ப்ரோ வரிசையை சீரிசை எடுத்து கொண்டால் 256 ஜிபி ரூ.1,34,900க்கும், 512 ஜிபி ரூ.1,54,900க்கும், 1டிபி ரூ.1,74,900க்கும் விற்பனையாகிறது. ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் சீரிசை எடுத்து கொண்டால் 256 ஜிபி 1,49,900க்கும், 512 ஜிபி ரூ.1,60900க்கும், 1டிபி ரூ.1,89,900க்கும் , 2டிபி ரூ.2,29,000க்கும் விற்பனையாகிறது.
இந்த ஐபோன்கள் மிஸ்ட் ப்ளூ, ஒயிட், பிளாக், ஸ்பேஸ் பிளாக், கிளவுட் ஒயிட், லைட் கோல்ட், ஸ்கை ப்ளூ, காஸ்மிக் ஆரஞ்ச், டீப் புளு, சில்வர் உள்ளிட்ட பல வண்ணங்களில் வந்துள்ளது. மாடலை பொறுத்து நிறங்கள் மாறுபடும். நம் நாட்டில் இந்த ஐபோன் 17 மாடல் கடந்த 9ம் தேதி அறிமுகம் ஆனது. இந்த ஐபோனை பலரும் ஆர்வமாக வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சீனாவில் தனியார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ஸை பரிசாக வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications